Patterns of Plugs Tamil Kids Tech
நம்மில் பலரும் டிவியோ அல்லது கம்ப்யூட்டரையோ ஆன் செய்ய பிளக் செய்திருப்போம். ஆனால் அந்த பிளக்கில் வந்த புதிய மாற்றங்கள், அதன் பயன்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து நாம் சிந்திப்பதில்லை.
அப்படி அந்த பிளக் பாயிண்டுகளில் என்னென்ன முக்கிய வசதிகள் உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் அந்த மெடல் பகுதி அதிக நீளமாக பிளக் உடன் வந்துகொண்டிருந்தது. ஆனால் தற்போது வரக்கூடிய பிளக்கில் பாதி மெட்டலும், மற்ற பாதியில் இன்ஸுலேஷனும் வைக்கப்படுகிறது. மக்கள் இந்த பிளக்கை பயன்படுத்தும்போதும் ஷாக் அடிக்காமல் இருக்க இந்த மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் பிளக்கை சாக்கெட் அல்லது பிளக் பாயிண்டில் இணைக்கும் போது, பழைய மாடல் பிளக்கில் நம் விரல்கள் அந்த மெட்டலை தொட வாய்ப்பிருக்கிறது. ஆனால் புதிய மாடலில் அந்த மேடான பகுதி, நம் விரல்களை அந்த மெடல் பகுதியை தொடுவதற்கான வாய்ப்பை தடுக்கிறது.
மேலும், அதற்கு பின் கொடுத்துள்ள அந்த கிரிப், நாம் அந்த பிளக்கை எளிதாக எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பிளக்கை இணைக்கும் போதும், இணைப்பிலிருந்து எடுக்கும் போதும் மக்களுக்கு ஷாக் அடிக்காமல் இருக்கும் வகையில் இந்த பிளக் அமைக்கப்பட்டுள்ளது.
Kidhours- Patterns of Plugs, Tamil Kids Tech
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.