Saturday, January 18, 2025
Homeகல்விகட்டுரை''சிங்கம்'' தமிழ் கட்டுரை Tamil Essay Lion

”சிங்கம்” தமிழ் கட்டுரை Tamil Essay Lion

- Advertisement -

Tamil Essay Lion  ”சிங்கம்” தமிழ் கட்டுரை

- Advertisement -

சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. காட்டுக்கு ராஜா என்றும் சொல்லப்படுகின்றது. பாடல்களிலும் இலக்கியங்களிலும் கதைகளிலும்கூட சிங்கம் காட்டு ராஜா என வர்ணிக்கப்பட்டுள்ளது.

பண்டைய நாகரீகங்கள் தொட்டு வீரத்துக்கும் விவேகத்திற்கும் எடுத்துக்காட்டாக சிங்கம் உவமானப்படுத்தப்பட்டு வந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இதற்கு முக்கியமான சில காரணங்கள் உண்டு. அவற்றைப் பின்னாலுள்ள பந்திகளில் பார்ப்போம்.
சிங்கத்தைக் கண்டிராத யாரும் இருக்கமாட்டீர்கள். புத்தகங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், மிருகக் காட்சி சாலையிலும் நிச்சயமாக நீங்கள் சிங்கங்களைக் கண்டிருப்பீர்கள். பூனை இனத்தைச் சார்ந்ததுதான் சிங்கம். பூனை இனத்து விலங்குகளில் புலிக்கு அடுத்ததாக பெரியது சிங்கம்தான்.

- Advertisement -

நாம் புகைப்படங்களிலும் தொலைக் காட்சிகளிலும் பார்த்திருப்பதைவிடவும் பெரியவைதான் இவை. ஆண் சிங்கம் பெண் சிங்கத்தைவிடவும் பெரியது. பெரிய தலையும் அடர்த்தியான பிடரி மயிரும் இவற்றுக்கு உண்டு. இந்தப் பிடரி மயிர்தான் அவற்றுக்கு மிடுக்கையும் அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கின்றது.

- Advertisement -

பெண் சிங்கத்திற்கு பிடரி மயிர் இருக்காது. ஆண் சிங்கத்தை விட சிரிதாக இருக்கும்.
சங்கங்களுக்கு பலமான நான்கு கால்களும் கால் பாதங்களில் கூர்மையான ஐந்து ஐந்து நகங்களும் பக்குவமாக மறைந்திருக்கும்.

Tamil Essay Lion  ''சிங்கம்'' தமிழ் கட்டுரை
Tamil Essay Lion  ”சிங்கம்” தமிழ் கட்டுரை

பாதங்கள் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். நிலத்தைத் தொடும் நீண்ட வாலும் வாலின் நுணுயில் தூரிகைபோன்று கொஞ்சம் மயிரும் இருக்கும்.

ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாகவும் பெண் சிங்கம் 120-150 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும். சிங்கங்களின் கர்ஜனையின்போது வரும் ஒலியின் அலை வரிசை பலமானது. இதனைத் தாங்க முடியாத ஏனைய விலங்குகள் சிங்க கர்ஜனைக்குப் பயந்து பின்வாங்கிச் சென்றுவிடும்.

சிங்கமொன்றின் கர்ஜனை எட்டு கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் வேறு ஒரு சிங்கத்தினால் கேட்க முடிகின்ற அலவு பலமாக இருக்கும்.
அமெரிக்கா, ஆபிரிக்கா, இந்தியா, சீனா, போன்ற நாடுகளில் சிங்கங்கள் அதிகமாக வாழ்கின்றன. எமது இலங்கை நாட்டிலும் விலங்கியல் சரனாலயங்களில் சிங்கங்கள் வளர்க்கப்படுகின்றன.

பொதுவாக இவை அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்புகின்றன. கூட்டமாக சேர்ந்து வாழும் இயல்பு கொண்ட சிங்கங்களில் ஆண் சிங்கங்கள் தன் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும்.

அவ்வெல்லையைச் சுற்றி மலம், சிறு நீர் கழிப்பதன் மூலமும் நகத்தால் மரங்களில் கீரியும் அதனை அடையாளப்படுத்தும். எனவே வேறு சிங்கங்கள் இந்த எல்லைக்குள் ஊடுருவுவதில்லை.

மீறி வந்தால் அதனைக் கடித்து மிரட்டி விரட்டியடித்துவிடும்
மற்றைய விலங்குகள் போலல்லாது சிங்கங்கள் கூட்டு வாழ்க்கை வாழும் குணமுடையன.

ஒரு கூட்டத்தில் நான்கு முதல் ஆறு வரையான பெண் சிங்கங்களும் ஒரு முதிர்ந்த ஆண் சிங்கமும் இன்னும் சில சிங்கக் குட்டிகளும் இருக்கும். ஆண் சிங்கமே அரசாலும். பெண் சிங்கங்கள் எப்படியும் இரத்த உறவுகளாகவே இருக்கும். இவற்றுக்குள் ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் அன்பாக நடந்துகொள்ளும்.

குட்டிகளுடன் விளையாடுவதும் கூட்டமாக காட்டைச் சுற்றிப் பார்க்கப் போவதும் கூட்டமாக வேட்டைக்குச் செல்வதும் நீரறுந்தச் செல்வதும் உறங்குவதும் இவற்றின் கூட்டுப் பண்பைக் காட்டுகின்றது. அனைத்து உருப்பினர்களும் ஆண் சிங்கத்திற்குக் கட்டுப்பட்டே நடக்கும்.

ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும்.

ஒரு கூட்டத்தில் வயது முதிர்ந்த ஒரு ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் ராஜாவான ஆண் சிங்கம் அதன் 10ஆவது வயதின் முடிவில் கூட்டத்திலிருந்து தனித்துச் சென்றுவிடவேண்டும். அதற்கு அடுத்த்தாக உள்ள ஆண் சிங்கம் அந்த இடத்தை நிரப்ப முடி சூடும்.

அவ்வாறு அதுவாகச் செல்லவில்லை என்றால் அடுத்து முடிசூட வேண்டிய இளம் ஆண் சிங்கம் பெரிய சிங்கத்தை அடித்து விரட்டிவிட்டு அந்த இடத்தை எடுத்துக்கொள்ளும். இவ்வாறு செய்வதன் நோக்கம் 10 வருடங்களை எய்தும் ஆண் சிங்கம் நலிவுற்று வயது முதிர்ச்சியடைய ஆரம்பிப்பதால் தனது கூட்டத்தைக் காப்பாற்ற முடியாத நிலைக்கு ஆளாகும்.

எனவே அந்தப் பொருப்பை அதன் பின் உள்ள ஆண் சிங்கம் பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றது.கூட்டத்திலிருந்து துரத்தப்படும் கிழட்டு சிங்கத்தால் சுயமாக வேட்டையாட முடியாத அளவு நலிவுற்றுவிடும்.

வேட்டைப் பற்கள் கூர்மையிழந்து, நகங்கள் பலமிழந்து, மெலிந்து உருக்குழைந்து அப்படியே இறந்துவிடும். சிலபோது வேறு விலங்குகளால் தாக்கப்பட்டும் இறந்துவிடும். ஆனால் பெண் சிங்கம் வயது முதிர்ச்சி அடைந்தாலும் கூட்டத்தில் ஒன்றாகவே இருக்கும்.

“சிங்கங்க வேட்டை” உண்மையிலேயே சுவாரஷ்யமானது. சிங்கங்கள் வேட்டையாடி உண்பதில் வல்லவை. அநேகமாக வேட்டையாடுவது பெண் சிங்கங்கள்தான். ஆண் சிங்கங்கள் இலகுவில் வேட்டைக்குச் செல்லாது. பெண் சிங்கம் கொண்டுவரும் உணவை உண்டு விட்டு கொட்டாவி விட்டு விட்டு உறங்கிக்கொண்டிருக்கும்.

ஒரு மாட்டையோ மாறையையோ வேட்டையாட மூன்று, நான்கு பெண் சிங்கங்கள் ஒன்று சேரும். இதுவே ஆண் சிங்கம் என்றால் அது மட்டுமே களத்தில் இறங்கும். ஆண் சிங்கங்கள் வேட்டைக்குச் செல்வது அரிது. அப்படியே சென்றாலும் தனித்துத்தான் வேட்டையாடும். வேட்டையாடியதை குடும்பத்துடன் பங்குபோட்டுக்கொள்ளும்.
சிங்கங்கள் பசித்தால் மட்டும்தான் வேட்டையாடும்.

ஒரு வேட்டையில் நன்கு உண்ட சிங்கங்கள் சில நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. பசி இல்லாதபோது என்ன விலங்குகள் கண்ணில் பட்டாலும் பக்கத்தில் வந்தாலும் அவற்றை வேட்டையாடாது. இது சிங்கத்திடம் இருக்கும் ஒரு விஷேட பண்பு. ஆனால் பொதுவாக ஏனைய வேட்டை விலங்குகள் அப்படியல்ல.

பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதிரில் உள்ள கண்ணில் பட்ட விலங்குகளையெல்லாம் வேட்டையாடும். சிலது விளையாட்டுக்கும் வேட்டையாடி அநியாயமாகக் கொன்றுவிடும்.சிங்கம் பசியெடுத்தால் இரை இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லும். யானை, ஒட்டகச் சிவிங்கி, குதிரை, வரிக் குதிரை, மாடு, மான், மறை, பன்றி என பெரிய இறைளைத்தான் தேடும்.

முயல், எலி போன்ற சிறிய விலங்குகளை அது வேட்டையாடாது. இரைகள் கூட்டமாக இருக்கும் இடத்தை அணுகியதும் தமது உடலை வேட்டைக்குத் தயார்படுத்தும். சிங்கத்தின் உடல் நிறம் அதன் சூழலின் நிறத்திற்கு இசைவாக இருப்பதால் புதர்களுக்குள் ஒலிந்திருக்கும் சிங்கத்தை ஏனைய விலங்குகளால் அடையாளம் காண்பது கடினம்.

பஞ்சு போன்ற தமது பாதங்களை மெதுவாக அடிவைத்து முன்னேறும். தமது காதுகளை அங்கும் இங்கும் திருப்பி சப்தங்களை உணர்ந்து தயாராகும். வாலை வலமும் இடமும் பூனைகளைப் போன்று அசைத்துக்கொண்டு குறிபார்க்கும்.

கூர்மையான கண் பார்வை, அபார மோப்ப சக்தி என அனைத்து ஆற்றல்களையும் ஒருங்கே சேர்த்து எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத நேரத்தில் வேட்டை விலங்கை விரட்டிப் பிடிக்க புதருக்குள் இருந்து பாய்ந்து ஓடும்.

சிங்கத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த உயிர் சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளும். கூர்மையான நீண்ட நகங்களை இரையின் உடல் தசைகளில் செழுத்தி அசைய முடியாத வண்ணம் கொக்கிபோன்று கொழுகிப் பிடித்துக்கொள்ளும்.

பின்பு தமது கூர்மையான வேட்டைப் பற்களைப் பயன்படுத்தி குரல் வலையை நசுக்கிக் கடித்து அந்த விலங்கைக் கொன்று விடும். அதன் பின்புதான் இரையை ருசிபார்க்க ஆரம்பிக்கும். தனது குடும்பத்தில் உள்ள பெண் சிங்கங்களும் சிங்கக் குட்டிகளும் வந்து சேர்ந்து உணவு உண்ணும்.

அனைவரும் உண்ணடதன் பின்பு மிச்சத்தை அப்படியோ போட்டுவிட்டு சென்றுவிடும்.
மற்றைய வேட்டை விலங்குகள் குறிப்பாக சிறுத்தை, புலி மற்றும் ஹயீனா எனும் சிறுத்தைப்புலி என்பன விலங்குளை வேட்டையாடினால் உண்டு விட்டு எஞ்சியதை அப்படியே போட்டுவிட்டுச் செல்லாது. அவற்றைத்தம் இரும்பிடத்திற்கு இழுத்துச் சென்று பாதுகாத்து வைத்து உண்னும்.

ஆனால் சேமித்து வைத்து, பழையதை உண்ணும் பழக்கம் சிங்கங்களிடம் இல்லை. வேட்டையில் உண்டவை போக மிச்சத்தை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிடும். அதனால்தான் சிங்க வேட்டை நடந்தால் மற்றைய விலங்குகள் தமக்கு விருந்து கிடைக்கும் என்பதை எதிர்பார்த்திருக்கும்.

சிங்கம் பசித்தால் மட்டுமே வேட்டையாடும். தாம் வேட்டையாடியதை மட்டுமே உண்ணும். ஏனைய விலங்குகள் உண்டு எஞ்சிய எச்சங்களை அது உண்ணாது. பிரஷ்ஷாகத்தான் உண்ணும்.

மேற்கூறியவாரு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டிருப்பதால்தான் சிங்கம் காட்டின் ராஜாவாக மதிக்கப்படுகின்றது. மற்றைய விலங்கினங்களிடம் இல்லாத வித்தியாசமான தனிச் சிறப்பு வாய்ந்த பண்புகள் சிங்கத்திடம் இருக்கின்றது.

 

Kidhours – Tamil Essay Lion  , Tamil Essay Lion animal

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.