The Green of the Desert தேடல்
பாலைவனப்பகுதி என்றாலே கண்ணுக் கெட்டும்தூரம் வரை மணல் பரப்புத் தான் காட்சி அளிக்கும். அதற்கு விதிவிலக் காக எங்காவது ஓரிடத்தில் நீர்த்தேக்கம் தென் படும். ஆனாலும் அதனை சூழ்ந்து மரம் செடி, கொடிகள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது அரிதானது.அப்படிப்பட்ட இடங்களுள் ஒன்று சகாரா பாலைவன பகுதியில் இருக்கிறது. லிபியா நாட்டின் ஒரு பகுதியில் இருக்கும் இந்த பாலை வனத்தில் ஏரி ஒன்று காணப்படுகிறது.
அது சுமார் 800 மீட்டர் தூரம் நீண்டு பாலைவன பரப்புக்கே மாறுபட்ட அழகையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது இந்த ஏரி நீரில் உப்பின் தாக்கம்தான் அதிக மாக இருக்கும் என்றாலும் அதற்கு தாக்குப்பிடித்து மரங்கள், செடி, கொடிகள் வளர் கின்றன. அத்துடன் புழு போன்ற தோற்றம் கொண்ட சிலமீன் இனங்களும் உலவுகின்றன.இந்த ஏரி பகுதியில் பழங்குடியினர் சிலர் வசித்து வந்தனர்.
1980-ம் ஆண்டில் அங்கிருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் குடியிருந்த கட்டிடங்களின் இடிபாடுகள் இன்னும் எரிபகுதி யில் காணப்படுகின்றன.

வறண்ட பாலைவன பூமியான இந்த ஏரி பகுதியில் ஆண்டுதோறும் 25 மில்லி மீட்டருக் கும் குறைவாகவே மழை பெய்கிறது.
அதை நம்பியும், நிலத்தடி நீர்மட்டத்தை எதிர்பார்த்தும் இந்த ஏரி தண்ணீரின் அளவு மாறுபடுகிறது. இதனை தண்ணீரின் தாய் என்றும், உம் எல் மா ஏரி என்றும் அழைக்கிறார்கள்.
Kidhours – The Green of the Desert
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.