Saturday, January 18, 2025
Homeகல்விசிறுவர் கதைகள்சிறுவர் நீதிக்கதைகள் - உண்மை சொல் - Tamil Kids Stories #...

சிறுவர் நீதிக்கதைகள் – உண்மை சொல் – Tamil Kids Stories # World Best Tamil Kids Stories

- Advertisement -

Tamil kids stories Unmai Sol – சிறுவர் நீதிக்கதைகள்  உண்மை சொல்

- Advertisement -

வெகு காலத்துக்கு முன் பழமுதிர் சோலை என்ற நாட்டை மன்னன் பழவர்த்தன் ஆண்டு வந்தார். அவர் நீதி நெறி தவறாதவர்; வாய்மை நிரம்பியவர்; உண்மை பேசுபவர். தன்னைப் போலவே தன் குடிமக்களும் இருக்க வேண்டும் என்று விரும்புபவர். அவருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தைகள் இல்லை.

தனக்கு பின் தன் நாட்டை ஆளத் தக்க வாரிசுகள் இல்லாததால், தன் நாட்டு மக்களில் நீதியும், நேர்மையும் தவறாத உண்மை யான ஒரு இளைஞனைக் கண்டுபிடித்து, அவனை மன்னனாக்க வேண்டும் என்று விரும்பினார்.
இதற்காக யாருடைய ஆலோசனையையும் நாடவில்லை. அவரே மிகச் சிறந்த அறிவாளியாக இருந்த படியினால், பல நாட்கள் யோசித்து ஒரு முடிவு செய்தார்.

- Advertisement -

நாட்டில் உள்ள வீரம் மிக்க இளைஞர் களை அழைத்து வில் போட்டி நடத்தினார். அதில் வென்றவர்களை அழைத்து, வாள் போட்டி நடத்தி பரிசீலனை செய்தார். அதன்பின், வாய் மொழிக் கேள்விகள், சமயோசிதமான கேள்விகள் என்று ராணுவத்துக்கு ஆள் எடுப்பதைப் போல அவர்களைச் சோதித்தார்.

- Advertisement -

கடைசியாக, பத்து இளைஞர்கள் தேறினர். அவர்களை மன்னர் அழைத்து, அவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக ஒரு செடியின் விதையைக் கொடுத்தார்.

“இந்த விதையை ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து, கவனமுடன் கண்காணித்து, ஆறு மாதம் சென்ற பிறகு, வளர்த்த செடியுடன் என் முன் வர வேண்டும். இதுதான் நான் உங்களுக்கு வைக்கக்கூடிய இறுதி கட்டச் சோதனை,” என்றார்.

பத்துப் பேரும் அதனை வாங்கிக் கொண்டனர். அதில், சாந்தனு என்ற வாலிபன் ஒருவனும் இருந்தான். எல்லாரும் மன்னர் சொன்னபடி அந்த விதையைத் தொட்டியில் போட்டுச் சிறந்த உரங் களையும், எருவையும் இட்டு வளர்க்க ஆரம்பித்தனர்.

சாந்தனுவும் அப்படியே செய்தான். ஆனால், என்ன காரணத்தினாலோ அவனது விதை முளைத்துச் செடியாகவில்லை. மற்றவர்களின் வீட்டுக்குப் போய் அவர்கள் செடி வளர்ந்திருக்கிறதா என்று அவன் கண்காணித்தான்.
என்ன ஆச்சரியம்! மற்றவர்களின் விதையானது நன்றாக முளைவிட்டு, இலை விட்டுச் செழித்து வளர ஆரம்பித்திருந்தது.

வீட்டுக்கு வந்த சாந்தனு தன்னிடமுள்ள விதை செடியாக எல்லா விதமான முயற்சி களையும் செய்தான். ஆனால், என்ன காரணத்தினாலோ, அந்த விதை முளைக்கவில்லை.

“முளைக்காத விதையை ஒரு வேளை மன்னர் தனக்குத் தந்திருப் பாரோ?’ என்று எண்ணினான். மறுகணமே, “ச்சே… என்ன மோசமான எண்ணம்… எல்லாருக்கும் கொடுத்தது போல தான் எனக்கும் கொடுத்தார். என் விதை முளைக்கவில்லை என்றால், அது என் துரதிருஷ்டம். மற்ற வர்கள் விதை எல்லாமே முளைத் திருப்பது அவர்களுடைய அதிர்ஷ்டம்.

“ஆறு மாதம்வரை பொறுத் திருந்து பார்ப்போம்… அப்போதும் விதை முளைக்காவிட்டால், “அரசே, என் விதை மட்டும் முளைவிக்கவில்லை!’ என்று உண்மையைக் கூறி விடுவோம். அதற்காக மன்னர், நான் சரியாக செடியைப் பராமரிக்கவில்லை என்று கருதி எனக்குத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம்!’ என்று கருதினான்.
ஆறு மாதம் சென்றன.

வெற்றிப் பெருமிதத்துடன் மீதியுள்ள ஒன்பது பேரும் தங்கள் கையில் தொட்டியை ஏந்தி வந்தனர். அதில் இரண்டடி நீளத்துக்குச் செடி வளர்ந்திருந்தது. அது ஆரோக்கியமாக இருந்தது.

மன்னர் எல்லாருடைய தொட்டி களையும் பார்த்துக் கொண்டே வந்தார். அவர் இதழ்களுக் கிடையில் புன்முறுவல் ஒன்று நெளிந்தது.சாந்தனுவிடம் வந்ததும் அவன் காலித் தொட்டியுடன் நிற்பதைக் கண்டவுடன் மன்னர் முகம் மாறியது.

நடுநடுங்கிப் போனான் சாந்தனு. அவனையே உற்றுப் பார்த்த மன்னர் அவனிடம் அதிகாரமாக கேட்டார்,

“உன்னுடைய பெயர் என்ன?”

“என் பெயர் சாந்தனு அரசே! தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும். நான் ஆறு மாத காலமாக இந்த விதையைச் செடி யாக்க எவ்வளவோ பாடுபட்டேன். ஆனால், உண்மையிலேயே என்னால் அதைச் செடியாக்க முடியவில்லை. என்னை நம்புங்கள் அரசே!” என்று மண்டியிட்டு கதறினான்.
மன்னர் கீழே குனிந்து அவனைத் தூக்கி நிறுத்தித் தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.

Tamil kids stories
Tamil kids stories

“எதிர்கால மன்னனைத் தேர்ந் தெடுக்கவே இப்போட்டிகளை வைத்தேன். அதில் வென்றவனாக இந்த சாந்தனுவை அறிவிக்கிறேன். இவன்தான் எதிர்கால மன்னன்!” என்றார்.
இதைக் கேட்ட அனைவரும் வியப்படைந்தனர்.

முதல் மந்திரி எழுந்து, “”அரசே, தாங்கள் சொன்னபடி ஒரு செடி கூட வளர்க்கத் தெரியாத இந்த வாலிபனா எதிர்கால மன்னன்? மன்னருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து செடியைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்காமல் சோம்பேறித் தனமாக இருந்து விட்டு, வெறும் பூந்தொட்டியைக் காட்டிய இவனா இந்த நாட்டு மன்னன்?” என்று கேட்டார்.

“அமைச்சரே, நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். இவன் அவனால் ஆகக் கூடிய முயற்சிகளை எல்லாம் செய்து பார்த்தான் என்பதை நான் நம்புகிறேன். ஏன் தெரியுமா? நான் பத்து இளைஞர்களுக்கும் செடி வளர்க்கக் கொடுத்த பத்து விதைகளும் நன்றாக வேக வைக்கப்பட்டு உலர்த்தப்பட்ட விதைகள்.

“அதில் எந்தச் செடியும் முளைக்காது. என்னிடமிருந்து பரிசுகளோ, பதவியோ பெறுவதற்காக மற்ற இளைஞர்கள் வேக வைக்கப்பட்ட விதைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக அதே போன்ற நல்ல விதைகளை வாங்கிப் பயிரிட்டுச் செடிகளாக்கிக் கொண்டு வந்திருக்கின்றனர்.

“ஆனால் சாந்தனு அப்படிச் செய்ய வில்லை. அரச கட்டளையை ஏற்று ஆறு மாத காலம் போராடிப் பார்த்திருக் கிறான். விதை முளைக்க வில்லை என்றதும், அதை உள்ளபடியே என்னிடம் அறிவிக்கக் காலித் தொட்டியுடன் வந்தான்.

“உண்மையைச் சொல்லும்போது என்னால் அவனுக்குத் தண்டனை ஏற்பட்டால் கூட அதைத் தாங்கச் சித்தமாயிருந்திருக்கிறான் என்பதை அவன் செயல், பார்வை, பேச்சு, வார்த்தை, நடத்தை மூலம் அறிந்து கொண்டேன்.
“இப்படி நேர்மையாக நடந்து கொண்டதன் மூலமாக அவனால் நிச்சயம் நாடு செழிக்கும்’ என்றுதான் அவனை மன்னனாக அறிவித்தேன்.

மன்னரின் அறிவுக் கூர்மையை எண்ணி அனைவரும் வியந்து பாராட்டினர். அங்கிருந்த செடி வளர்த்த ஏனைய இளைஞர்கள் அரசனிடம் மன்னிப்புக் கோரினர். அரசனும் அவர்களை மன்னித்தார்.

kidhours – Tamil kids stories , Tamil Kids Stories -sirukathigal ,neethikkathaigal,Tamil kids stories

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.