Tennis Champion சிறுவர்களுக்கான உலக செய்திகள்
டேவிஸ் கிண்ண டென் னிஸ் தொடரில் 47 வரு டங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இத்தாலி அணி.
டேவிஸ் கிண்ண டென் னிஸ் தொடரின் இறுதிப் போட்டி ஸ்பெயினில் உள்ள மலாகா நகரில் நடைபெற் றது. பட்டம் வெல்வதற் கான இந்த ஆட்டத்தில் இத்தாலி – அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் நடை பெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டி, அவுஸ்திரேலியாவின் அலெக்ஸி போபிரினை எதிர்த்து விளையாடினார்.
இதில் மேட்டியோ அர் πύη 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இத்தாலி 1-0 என முன் னிலை பெற்றது.
2 ஆவது ஆட்டத்தில் இத் தாலியின் ஜன்னிக் ஷின் னர், அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் ஜன்னிக் ஷின்னர் 6-3, 6-0 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த மோதலில் 2-0 என வெற்றி பெற்ற இத்தாலி அணி சம்பியன் பட்டம் வென்றது. டேவிஸ் கிண்ண தொடரில் இத்தாலி 47 வருடங்களுக்குப் பிறகு பட்டம் வென்றுள்ளது.
Kidhours – Tennis Champion
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.