Forming Caves சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இயற்கை பாறையை செதுக்க தண்ணீ “ரைப் பயன்படுத்துகிறது. சொட்டுச் சொட்டாக தண்ணீரை பாய்ச்சி, பாறையின் மூலக்கூறுகளைப் பிரிக்கிறது. பல லட்சம் ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்து, அணில் கொறிப்பது போல பாறையைச் செதுக்கி, உலகின் முதல் சிற்பி என்ற பெயரை தண்ணீர் தக்கவைக்கிறது.
எங்கே இதன் முடிவு இருக்கிறது என்று இன்னும் அறியப்படாத நியூ மெக்சிகோவின் கார்ல்ஸ்பட் குகைகளும், தொங்கும் மலைகளா கக் காட்சியளிக்கும் தென்மேற்கு சீனா வின் கிளின் மலைக்குகைகளும் இயற்கை இப்படி மெல்ல மெல்ல உருவாக்கிய அற்பு தங்கள்தான்.
‘மாபெரும் டிராகனின் நூற்றுக்கணக்கான பற்கள் தொங்கிக் கொண்டிருப்பது போல குலின் மலை அமைந்தி ருக்கிறது’ என சீனக் கவிஞர்கள் வர்ணிக்கி றார்கள். அந்த அளவுக்கு நவீன கட்டுமான என்ஜினீயர்கள் நினைத்து கூடப் பார்த்திராத அதிசயம் அது!
Kidhours – Forming Caves
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.