Tamil Kids Short Essay River சிறுவர் கட்டுரை
மலையின் அழகை வார்த்தைகளில் வடித்த பாரதிதாசன், பாயும் அருவியின் அழகினையும் எடுத்துரைக்கிறார. இயற்கையைப் பற்றிப் பாடிய பல புலவர்களும் அருவியின் அழகை விளக்கிப் பாடியுள்ளனர். ஆனால் பாரதிதாசன், பாயும் அருவிக்குப் புதியதொரு விளக்கம் கொடுக்கிறார்.
மலையிலிருந்து பாயும் அருவியைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த கவிஞர், பக்கத்தில் பறந்து கொண்டிருக்கும் குருவிகளைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். மலர்ந்திருந்த மலர்களையும் கண்டுகளித்திருக்கிறார். அதை அப்படியே கவிதையாக்கித் தந்துள்ளார்.
அருவிகள், வயிரத் தொங்கல்
அடர்கொடி, பச்சைப்பட்டே !
குருவிகள், தங்கக் கட்டி !
குளிர்மலர், மணியின் குப்பை
மாணவர்களே ! புரிகின்றதா பாரதிதாசன் என்ன சொல்கிறார் என்று? மலையின் உச்சியிலிருந்து அருவிகள் கீழ்நோக்கிப் பாய்கின்றன. அவை, பாரதிதாசன் பார்வையில், ஒளிவீசும் வயிரத்தை (Diamond) கட்டித் தொங்கவிட்டது போல் காட்சி அளிக்கின்றன.
அருவியின் பக்கத்து மரங்களில் படர்ந்திருக்கும் நெருக்கமாக இருக்கும் கொடிகள், பச்சைநிறத்தில் அமைந்த பட்டைப்போல் காணப்படுகின்றன. மரங்களில் அமர்ந்திருக்கும் குருவிகள் தங்கத்தால் ஆகிய கட்டிகள் போலுள்ளன.
மலர்கள் எல்லாம் மணியின் கூட்டம் போன்று அமைந்துள்ளன. கவிஞர் கூறும் ஒவ்வோர் உவமையும் அவரது புதிய நோக்கையே சுட்டுகிறது. அருவியைப் பலரும் பலவிதமாகப் பாடியுள்ளனர். ஆனால், மாறுபட்ட நிலையில் பாரதிதாசன் பாடிய தன்மை புதுமையானது.
உலகிலுள்ள விலை உயர்ந்த பொருள்களாகிய வைரம், தங்கம், மாணிக்கம் போன்ற பொருள்களோடு, அருவியின் காட்சியை ஒப்பிட்டுக் கூறுகிறார். அதன் காரணம் என்ன? தான் பார்த்த அருவியின் காட்சி, விலை மதிக்கமுடியாத உயர்ந்த தன்மை உடையது என்பதைப் புலப்படுத்தவே இவ்வாறு கூறுகிறார். இப்பாடலில், இயற்கைக் காட்சியின் தன்மையையும், தரத்தையும் வெளிப்படுத்தவே இவ்வாறு கூறுகிறார் பாரதிதாசன்.
பாரதிதாசன் ஒரு சமுதாயச் சிந்தனையாளர். சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர். எனவே வாய்ப்புக் கிடைக்கும் பொழுது எல்லாம் அதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மலையின் அழகைப் பற்றிப் பாடும் பொழுதும், தம் வாழ்க்கையில் விடிவே இல்லாமல் வருந்தும் அடிமையின் உள்ளக் குமுறல் தான் அவர் நினைவுக்கு வருகிறது .
அடிமை நெஞ்சம்
புகைதல் போல் தோன்றும் குன்றம் !
கவிஞரின் அடிமனத்தில் சமுதாயச் சிந்தனை எவ்வளவு ஆழமாக வேர் ஊன்றியுள்ளது, பாருங்கள்!
kidhours – Tamil Kids Short Essay River,
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.