Tamil Kids Short Essay Autobiography சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நான் தான் தொலைக்காட்சி.’ என்று கம்பீரமாக சொல்லும் நிலைமையில் நான் இப்போது இல்லை. நான், அழுது அழுது நொந்து போய்விட்டேன். அது மட்டும் இல்லாமல், நான் யாருமில்லாத அனாதை வேறு.
முன்பு, அந்தக் கறுப்பு நிற அலமாரி மீது கம்பீரமாக வீற்றிருந்தேன். இப்போது, சொல்லவே கவலையாக இருக்கிறது. மிகவும் அசுத்தமாக, பயன்படாதப் பொருளாக ஆகிவிட்டேன். குப்பைத்தொட்டியில் கிடக்கிறேன்.
என்னை முதன் முதலில் ‘பூச்சோங்கில்’ உள்ள ஒரு தொழிற்சாலையில் செய்தார்கள். அதுதான் என் பிறந்த இடமும் கூட. பிறகு நான் விற்பனைக்கு வந்தேன். வந்த சில வாரத்தில் ஒருவர் என்னை வாங்கிச் சென்றார். என்னை அவர் அழைத்துச் செல்லும்போது அவரின் அன்பான தொடு உணர்வு எனக்குப் பேரின்பத்தை அளித்தது. அவர் வீட்டில் என்னை ஒரு பெரிய அலமாரி மீது வைத்தார்.
அவரும், அவர் குடும்பத்தாரும் என்னை விரும்பிப் பார்ப்பார்கள். ஆடல், பாடல், நாடகம், திரைப்படம், என என்னைத் துருவித் துருவி பார்ப்பார்கள். நான் அனைத்திற்கும் ‘ஆமாம் சாமி’ போட்டு அவர்களுக்கு உழைத்தேன். மாதம் முடிந்த பின்பு மின்சார கட்டணம் ‘கிடு கிடு’ என ஏறி இருப்பதைப் பார்த்தும் அவர்கள் கவலைப் பட்டதாக தெரியவில்லை. நானும், விசுவாசமாக உழைத்தேன். அதற்கு வேட்டு வைக்க ஒரு சம்பவம் நடந்தது.
ஒரு நாள் வீட்டுக்காரர் தன் குடும்பத்தோடு வெளியூருக்குச் சென்று விட்டார். தன் பெரிய மகன் மட்டும் வீட்டைக் கவனித்துக் கொள்ள வீட்டிலேயே விட்டு சென்று விட்டார். அவனோ, தான் வாங்கி வந்த திருட்டு ‘விசிடி’ படத்தை வாங்கி என் வயிற்றுனுள் போட்டான். முதலில் நான் அது என்ன படம்” என பார்த்தேன்.
ஐயோ! அது ஆபாச படம். உடனே அதனை நான் படம் வெளியே வராதபடி சில கோளாறு உள்ளதாக நடித்தேன். அவன் மீண்டும் மீண்டும் என்னைத் தட்டி தட்டிப் பார்த்தான். நான் அவனுக்கு வழி விடவில்லை.
அவனுக்குக் கோபம் வந்து விட்டது. என்னைத் தூக்கிக் கீழே போட்டான். நான், ‘படார்’ என விழுந்தேன். எனக்குச் செம்ம அடி. என் உறுப்புகள் சில கிழே விழுந்து சிதறின, சிறிது நேரத்தில் நான் மயங்கி விழுந்தேன்.
என்னை யாரோ எழுப்புவது போல் உணர்ந்தேன். சற்று கண்விழித்தேன். என் முதலாளிதான் என்னைத் தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு மட்டும் வாயிருந்தால் அவர் மகன் செய்த சேட்டைகளை ஒன்று விடாமல் சொல்லிருப்பேன். எனக்கு மட்டும் கை இருந்தால் அவனை ஓங்கி அடித்திருப்பேன்.
முடிந்தால் போலிஸ்காரரைக் கூப்பிட்டு அவனைச் சிறைக்கு அனுப்பி இருப்பேன். ஆனால், ஆ…ஆ… என் கண்கள் மீண்டும் சொருகுதே! அவனை அடுத்த பிறவியில் பார்த்துக் கொள்கிறேன். கடவுளிடம் சென்று வருகிறேன்
என்று கூறி தொலைக்காட்சி தன் கதையை சொல்லி முடித்தது
kidhours – Tamil Kids Short Essay Autobiography
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.