About Sleeping in Tamil
சராசரியாக மனிதன் வாழ் நாளில் 23 ஆண்டு களை தூக்கத்திலேயே கழிக்கிறான். பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உறங்கும். 3 முதல் 5 வயது வரை யுள்ள குழந்தையின் தூக்க நேரம் 11 மணிகள். வளர வளர குழந்தையின் தூக்க நேரம் குறைந்து சராசரியாக 8 மணிநேரம் என்றாகிவிடும்.
நாள் முழுவதும் கடினமாக உழைத்தபின், உடலுக்கு ஓய்வு கொடுக்க நல்ல தூக்கம் அவசியம். முழுமையான நல்ல தூக்கத்தை அனுபவித்தால், அடுத்த நாள் காலையில் உங்கள் மனநிலை புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் அன்றய நாளில் மன நிம்மதியுடன் உற்சாகமாக வேலை செய்ய முடியும். இதனால் உங்கள் உற்பத்தி திறனும் சிறப்பாக இருக்கும்.
நம்மில் பலரும் உடலுக்குத் தேவையானதை விட அதிக நேரம் தூங்குகிறோம். இதனால் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும் என்று எண்ணுவது தவறானது. சராசரியாகத் தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, குறைவான நேரம் தூங்குபவர்களுக்கு 27% மற்றும் நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு 21% உடல் பருமன் ஏற்படும் அபாயம் அதகரிக்கிறது.
நீங்கள் குறைவான நேரம் மட்டுமே தூங்குகிறீர்களா?, உங்கள் உடலுக்குக் குறைவான தூக்கம் போதும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் உடலைக் குறைவான தூக்கத்திற்கு பழக்கப்படுத்த முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறானது. இது சாத்தியமில்லை என்று மெடிக்கல் நியூஸ் டுடேயின் அறிக்கை கூறுகிறது. சில ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, 6 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் உள்ள ஒருவர் செயலாற்றுவது மிகவும் அரிது. இது போன்ற பழக்கம் உள்ளவர்கள் எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.
ஒவ்வொரு இரவும் 6 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகத் தூங்குபவர்கள், தூக்கமின்மையின் விளைவுகளுக்குப் பழக்கப்பட்டுவிடுகிறார்கள், ஆனால் அதற்காக அவர்களின் உடலுக்குக் குறைவான தூக்கம் தேவைப்படுகிறது என்பது அர்த்தமல்ல.
Kidhours – About Sleeping
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.