About Bacterial Brick சிறுவர் கட்டுரை
இந்த பாக்டீரியா செங்கல்.
குழந்தைத் தொழி லாளர்கள் இல்லாமல், வானளவுக்குப் புகை எழுப்பும் சூளை இல்லா மல், வேலையாட்கள் யாருமே இல்லாமல் செங் கற்களை தயாரிக்க முடி யுமா? ‘முடியும்’ என்று கட்டை விரலை உயர்த் திக் காண்பிக்கின்றனர், அமெரிக்காவைச் சேர்ந்த கொலராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள். ஏனெனில் இந்தச் செங்கற்களைப் பாக்டீரியாவைக் கொண்டு தயாரிக்கின்றனர்.
பாக்டீரியாவால் நோய் தான் வரும். செங்கல் வருமா? என்று கேட்டால், ‘வரும்’ என்ற பதிலே கிடைக் கிறது. செங்கல்லுக்குத் தேவையான மணல், ஹைட் ரோஜெல் கலவையுடன் ஒரு வகை பாக்டீரியாவையும் கலக்கின்றனர். இதை ஒரு வார்ப்பில் போட்டுவிட்டா பாக்டீரியாக்கள், சுற்றியுள்ள கார்பன்-டை-ஆக்சை வாயுவை உட்கொண்டு,கால்சி யம் கார்பனேட்டை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதிப் பொருள் ஹைட்ரோ ஜெல்லையும் மண லையும் பிணைக்கிறது. இதனால் வார்ப்பில் உள்ள மணல் மற்றும் ஹைட்ரோஜெல் கலவை மெல்ல மெல்ல இறுகி செங்கல்லாக மாறுகிறது.
இந்த செய்முறையின் போது பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. மேலும் அவை கால்சியம் கார்பனேட்டை உற்பத்தி செய்து தள்ளுவ தால், வார்ப்பில் பாதி அளவு மணல்-ஹைட்ரோஜெல் கலவை இருந்தாலே அதைப் பெருக்கி வார்ப்பு முழு வதையும் நிரப்பிவிடுகின்றன.
பாதியாக உடைக்கப்பட்ட பாக்டீரியா செங்கல், மேலும் வளர்ந்து எட்டு முழுக்கற்களை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இன் னும் சோதனையில் இருக்கும் இந்த உயிரி தொழில் தொழ நுட்பம் கட்டுமான தொழிலில் ஒரு புரட்சியை ஏற்படுத் தும் என்று நம்பப்படுகிறது.
Kidhours – About Bacterial Brick
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.