Tuesday, September 24, 2024
Homeசிறுவர் செய்திகள்திடிரென தீப்பற்றிய வணிக்க கப்பல் Ship Caught Fire

திடிரென தீப்பற்றிய வணிக்க கப்பல் Ship Caught Fire

- Advertisement -

Ship Caught Fire  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இந்தியக் கடலோரப் பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்குகளை ஏற்றிய வணிகக் கப்பல் மீது ஆளில்லா விமானம் (ட்ரோன் – Drone) மூலம் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் பொது அதிஷ்டவசமாக கப்பலில் பயணித்தவர்கள் எவருக்கும் எந்தவிதமான சேதமும் எப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து மேலும் தெரியவருவதாவது,

- Advertisement -

இஸ்ரேலுடன் தொடர்புடைய லைபீரிய தேசிய கொடி ஏற்றிய வணிகக் கப்பல் ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து மசகு எண்ணெய் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் இந்திய கடல் எல்லையில் அரபிக் கடல் வழியாக சென்றுகொண்டிருந்தபோது அதன் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலை அடுத்து, கப்பலில் தீ பற்றியுள்ளது, மாத்திரமல்லாமல் இந்தத் தாக்குதலால் இதுவரை ஏற்பட்ட இழப்புக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இந்த சம்பவத்தை அடுத்து இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று 20 பேருடன் அந்த வணிகக் கப்பலை நோக்கி சென்றுள்ளது.

- Advertisement -

தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் ஹவுதி படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதேபோல், கடந்த மாதமும் இந்திய பெருங்கடலில் இஸ்ரேலுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஈரானிய புரட்சிப் படையானது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரை அடுத்து, ஈரான் ஆதரவு ஹவுதி படை, செங்கடலில் தனது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல்நடத்தி வருவதால், இஸ்ரேலுக்கு எதிராக தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என ஹவுதி படை அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை அடுத்து, இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பல கப்பல்கள் தங்கள் வழித்தடத்தை மாற்றியுள்ளன.

செங்கடலில் ஹவுதி படையினர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஹவுதி படையினர் 35 நாடுகளைச் சேர்ந்த 10 வணிகக் கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

Ship Caught Fire  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Ship Caught Fire  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஹவுதி படையினரின் பின்னணியில் ஈரானுக்கு ஆழமான தொடர்பு உள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் காசாவில் தொடர்ந்து குற்றங்களை செய்தால் மத்திய தரைக் கடலை பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம் என்று ஈரானிய புரட்சிப் படையின் தளபதி கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

kidhours – Ship Caught Fire , Ship Caught Fire in indian Ocean

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.