Secrets of the Cloud சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நாசாவின் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் மூலம் பூமியில் இருந்து சுமார் 630 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு மூலக்கூறு மேகத்தின் உள்ளே இருக்கும் பொருட்களை துல்லியமாக கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள் நாம் வாழும் பூமி இந்தப் பேரண்டத்தின் ஒரு சிறு பகுதி.
அதே போல் நாம் வாழும் இந்த சூரியக் குடும்பம் போல பல ஆயிரக் கணக்கான சூரியக் குடும்பங்கள் பால் வெளியில் இருக்கின்றன. அந்த பால்வெளி பிரபஞ்சம் நமக்கு ஒவ்வொரு நாளும் பல ஆச்சரியங்களை அள்ளி வீசிக் கொண்டு தான் இருக்கின்றன.
நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல அதிசயங்களை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது இந்தப் பேரண்டம். அப்படி ஆச்சரியமான உண்மையை அண்மையில் கண்டறிந்து வெளியிட்டிருக்கிறார் நாசா விஞ்ஞானிகள். நாசா நிறுவியுள்ள ஜேம்ஸ் வெப் என்ற தொலை நோக்கி மிகவும் சக்தி வாய்ந்தது.
அந்த தொலைநோக்கி மூலம் ஒரு மூலக்கூறு மேகத்தை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது பல ஆச்சரியமூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன. விஞ்ஞானிகள் ஆய்வு செய்த மூலக்கூறு மேகத்தின் பெயர் கேமலியோன். இது பூமியில் இருந்து சுமார் 630 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.
அவ்வளவு தொலைவில் இருக்கும் அந்த மூலக்கூறு மேகத்தை ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்துள்ளனர் விஞ்ஞானிகள். அந்த ஆய்வு முடிவு தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்கள்.
கேமலியோன் 1 என்ற அந்த மூலக் குறு மேகத்தில் மீத்தேன், சல்பர், நைட்ரஜன் மற்றும் எத்தனால் ஆகியவை அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மூலக்கூறு மேகங்கள் என்பது ஹைட்ரஜன் மற்றும் கார்பன் மோனாக்சைடு வாயுக்களை உருவாக்கக்கூடிய தன்மை கொண்டது. தூசிகள் நிறைந்த விண்மீன் குழுக்களான இவை நட்சத்திரங்களின் பிறப்பிடம் என்றும் குறிப்பிடலாம்.
நட்சத்திரங்கள் பிறப்பதற்கு மூலமாக இருப்பது இதுபோன்ற மேகங்கள் தான். இந்த மேகங்களுக்குள் இருந்து அடர்த்தியான பகுதிகள் சரிந்த விழும் போது புரோட்டோஸ்டார் எனப்படும் இளம் நட்சத்திரங்கள் உருவாகின்றன. அவை தான் பின்னாளில் நட்சத்திரங்கள் உருவாக காரணமாக இருக்கின்றன.
அப்படிப்பட்ட மூலக்கூறு மேகமான கேமலியோனில் இதுவரை மற்ற மூலக்கூறு மேகங்களில் காணப்படாத அளவிற்கு தனிமங்கள் இருப்பது நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பனிக்கட்டிகள் நிறைந்த இந்த மூலக்கூறு மேகத்தை ஆய்வு செய்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு, குளிர்ந்த பனிக்கட்டி நீருடன் மேகத்தின் உள்ளே அமோனியா, மெத்தனால், மீத்தேன் மற்றும் கார்போனைல் சல்பைட் ஆகியவை உறைந்த வடிவங்களாக இருந்ததை அடையாளம் கண்டுள்ளனர்.
ஒரு மூலக்கூறு மேகத்துக்குள் இத்தனை ரகசியங்கள் இருப்பது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
Kidhours- Secrets of the Cloud
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.