Tamil Kids Scientistic News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகின் முதல் செயற்கை கரு இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஆன்மாவின் இதயமும் துடிக்க, மூளையும் முழு வடிவம் பெற்றுள்ளது.
குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு இன் விட்ரோ கருத்தரித்தல் IVF அதாவது இந்த நுட்பத்தில், விந்தணு மற்றும் முட்டை மூலம் ஆய்வகத்தில் கரு தயாரிக்கப்படுகிறது.

இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மேன் நிறுவன விஞ்ஞானிகள் கரு முட்டைகளோ, விந்தணுக்களோ இல்லாமால் செயற்கை கருவை உருவாக்கியுள்ளனர்.
இது வரும் காலங்களில் ஸ்டெம் செல்கள் உதவியுடன் மாற்று உறுப்புகள் உருவாக்குவதிலும், கரு தரிப்பு முறைகளிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இஸ்ரேலின் வெய்ஸ்மேன் நிறுவனம் ஸ்டெம் செல்கள் மூலம் இந்த கருவை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளனர்.
இப்போது கருவின் இதயத்துடிப்பும் வந்து அதன் மூளையும் தயாராகிறது. இந்தக் கரு எலியின் கரு என்பது குறிப்பிடத்தக்கது. இது தொழில்நுட்பத்தில் ஒரு முக்கியமான வெற்றியாகும். விந்து, கருமுட்டை மற்றும் கருப்பை இல்லாத ஒரு கருவை உருவாக்குவது அறிவியல் உலகிற்கு ஒரு மைல்கல்.
இந்த நுட்பத்தின் மூலம், ஸ்டெம் செல்கள் பற்றிய ஆராய்ச்சியின் புதிய வழிகள் திறக்கப்படும்.அத்தோடு உறுப்புகளை உருவாக்க ஸ்டெம் செல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது அறியப்படுவதோடு அதன் உதவியுடன், மாற்று உறுப்புகளை உருவாக்கவும் இது உதவும்.
வெய்ஸ்மேனின் (Weismann) “வொண்டர் சயின்ஸ் நியூஸ் அண்ட் கல்ச்சரில்” வெளியிடப்பட்ட ஆய்வின் பேராசிரியர் ஜேக்கப் ஹன்னா (Jacob Hanna) இதுவரை பெரும்பாலான ஆராய்ச்சிகளில், சிறப்பு செல்களை உற்பத்தி செய்வது கடினம் அல்லது தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கண்டறிந்துள்ளது.

கூடுதலாக நன்கு கட்டமைக்கப்பட்ட திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்றதாக இல்லை. இந்த தடைகளை எங்களால் கடந்து சாதிக்க முடிந்துள்ளது. இது எதிர்காலத்தில், இந்த ஆராய்ச்சி மருத்துவ அறிவியல் உலகில் புரட்சிகரமானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆய்வில் செயற்கை கருக்கள் 8.5 நாட்களுக்கு தொடர்ந்து உருவாகின்ற நிலையில் அதன் அனைத்து ஆரம்ப நிலையில் வலரும் உறுப்புகளும் உருவாகியுள்ளன.
துடிப்பு இதயம், சுற்றும் இரத்த ஸ்டெம் செல்கள், நன்கு வடிவமைக்கப்பட்ட மூளை, ஒரு நரம்பு குழாய் மற்றும் குடல் பாதை ஆகியவை உருவாகியுள்ளது.
செயற்கை மாதிரியானது உடல் கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு செல் வகைகளின் மரபணு வடிவங்களின் வடிவத்தில், இயற்கையாக உருவாகும் கரு உடன் 95 சதவீத ஒற்றுமையைக் காட்டியது குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids Scientistic News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.