Wood vaulting and Climate உலக காலநிலை செய்திகள்
உலகில் காலநிலை மாற்றத்தினால் பாரிய சூழல் பிரச்னையை ஏற்படுத்தி வரும் நிலையில் விஞ்ஞானிகள் (Dr. Ning Zeng) 2013ஆம் ஆண்டு, “வூட் வால்டிங்” (Wood vaulting) என்ற முறையை மேற்கொண்டு காலநிலை மாற்ற பாதிப்புகளில் முகம்கொடுத்து வாழவேண்டும் என்று முயற்சித்தனர், இந்த முறைமை மரம் உடைந்துவிடாமல் தடுக்கவும், அதனுடன் கார்பன் டயாக்சைடைப் வெளியிடாமல் தடுப்பதற்கான ஒரு வழியாகும்.
அதாவது மரங்கள் கார்பன் டயாக்சைடைக் (carbon dioxide) கவர்ந்து தங்களது மரத்தின் உற்பகுதியில் சேர்த்து வைத்திருக்கும். இதன் மூலம் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட உதவுகின்றன. ஆனால் மரங்கள் இறந்த பிறகு, அவை சிதைந்து, சேர்த்து வைத்திருந்த கார்பன் டயாக்சைடைக் காற்றில் விடுகின்றன.
காலநிலையியல் நிபுணர்கள் கனடாவின் க்யூபெக்கில் மாநிலத்தில் ஒரு மரத்தை அடியில் புதைத்து, அதில் கார்பன் நிலைத்திருக்குமா? என பரிசோதிக்க திட்டமிட்டனர். இதனிடையில் கிடங்கு ஒன்றை தோண்டும் போது, 3,775 ஆண்டுகள் பழமையான ஒரு மரக்கட்டையை அவர்கள் கண்டுபிடித்தனர். அது சிதைவதில்லை என கண்டுபிடித்து, அவர்களின் யோசனை நியாயமானது எனத் தெரியவந்தது. அந்த மரம் தனது கார்பனில் 5% மட்டுமே இழந்தது.

இந்தக் கண்டுபிடிப்பில் ஒரு மரத்தினை நிலத்தில் புதைத்து வைப்பதன் மூலம் மரத்தில் கார்பனை நீண்டகாலம் கட்டுப்படுத்த உதவும் வழி என்பதை உறுதிசெய்கிறது என்பதனை . இது உணர்ந்துகொண்டனர் அல்லாமல் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க உதவக்கூடும் எனவும் அறிக்கையில் தெரிவித்தனர்.
Kidhours – Wood vaulting and Climate
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.