Tamil Kids Science News Nasa பொது அறிவு – உளச்சார்பு
ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. நாசாவின் ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் 2வது முறையாக விண்ணில் செலுத்துவது நிறுத்தம். எரிபொருள் கசிவு காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக நாசா அறிவிப்பு.

நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட உள்ளது. ஆர்ட்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும்.
நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
கடந்த 29-ம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது.
எதிர்பாராதவிதமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று இரவு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்படுவதை பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதி குளிர் திரவ ஹைட்ரஜன் உள்ளே செலுத்தப்பட்டதால் ராக்கெட்டின் அடிப்பகுதிக்கு அருகில் கசிவு கண்டறியப்பட்டது.
பொறியாளர்கள் எரிபொருள் கசிவைக் கண்டறிந்ததும், ராக்கெட்டின் நான்கு முக்கிய எஞ்சின்களில் ஒன்று மிகவும் சூடாக இருப்பதை சென்சார் காட்டியதும் ஆரம்ப ஏவுதல் முயற்சி நிறுத்தப்பட்டது.
இதனால் ராக்கெட் ஏவும் முயற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் வடிவமைப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids Science News Nasa
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.