Tamil Kids Science Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நிலாவில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர். இதற்காக விண்வெளிக்கு வீரர்கள், ரோவர்களை அனுப்பி பல கட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அப்படி 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பல்லோ விண்கலம் மூலமாக ரெகோலித் என்றும் அழைக்கப்படும் நிலவு மண் பூமிக்கு கொண்டு வரப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அதில் முதன்முறையாக, ஆராய்ச்சியாளர்கள் கடினமான மற்றும் நன்கு ஆய்வு செய்யப்பட்ட அரபிடோப்சிஸ் தலியானா என்ற தாவரத்தை வளர்த்துள்ளனர்.
புளோரிடா பல்கலைக்கழகத்தில் நாசாவின் நிதியுதவியுடன் கூடிய விஞ்ஞானிகள் குழுவால் இந்த பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறுகையில், “நாசாவின் நீண்ட கால மனித ஆராய்ச்சிகளிலேயே இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உள்ள வளங்களை நாம் பயன்படுத்தி எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு உணவு ஆதாரங்களை உருவாக்க முடியும்.

விவசாய கண்டுபிடிப்புகளைத் உருவாக்க நாசா எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டு ஆகும். இது பூமியில் உணவுப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தாவரங்கள் எவ்வாறு மன அழுத்தத்தை சமாளிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.
புளோரிடா பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை அறிவியல் துறையின் பேராசிரியரான ராபர்ட் ஃபெர்ல் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் “50 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்பல்லோ ஆய்வகங்களில் மீண்டும் தொடங்கப்பட்ட சோதனைகளை நாங்கள் முடித்திருக்கிறோம். முதலில் தாவரங்கள் ரெகோலித்தில் வளர முடியுமா என்ற கேள்வியை கேட்டு கொண்டோம். இரண்டாவதாக, மனிதர்கள் நிலவில் நீண்ட காலம் தங்குவதற்கு அது எப்படி உதவும். இதற்கான முதல் விடையை இப்போது கண்டறிந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
kidhours – Tamil Kids Science Latest News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.