Atom Research Scientist பொது அறிவு செய்திகள்
அணுவை துளைத்து பார்த்து அணுவை அதன் அடிப்படை துகள்களான புரோட்டான், எலெக்ட் ரான், நியூட்ரான் ஆகிய வற்றை அடையாளம் காட்டுவ தற்கு நிறைய இயற்பியல் விஞ்ஞானிகள் பாடாய் பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் முக்கியமானவர்தான் ஜெ.ஜெ.தாம்சன்.எனப்படும் எலெக்ட்ரானைக் கண்டுபிடித்து, இன் றைய அணுசக்தி பயன்பாட்டுக்கெல்லாம் அஸ்தி வாரம் போட்டவர் இவர்தான்.
இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நகரில் உள்ள சீத்தம் ஹில் என்ற இடத்தில் 1856-ம் ஆண்டு பிறந்தார் தாம்சன். சிறு வயது முதலே படிப்பில் மிகத் திறமையான மாணவனாக தன்னை நிரூபித்தார்.
ஆசைப்பட் டது போல அவரை ஒரு பொறி யாளராக்க குடும்பத்தால் முடிய வில்லை என்றாலும், முழுக்க முழுக்க தன் படிப்பாலும் அது தந்த உதவித் தொகைகளாலுமே படித்து பட்டம் பெற்று பேராசிரியர் ஆனார். அணுவைப் பிரித்தறியும் தன் ஆராய்ச்சியை.கேம்பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தில் இயற்பியல் ஆய்வுக்கூடப் பேராசிரியராக இருந்து கொண்டே செய்து வந்தார்.
இதில் பல் வேறு கிளை ஆய்வுகளையும் அவர் செய்ய நேர்ந் தது. அதில் ஒன்றுதான் கேத்தோட் கதிர் ஆய்வு. நேர் பாதையில் செல்லும் கேத்தோட் கதிர்களை.
மின் காந்தப் புலம் மூலம் திசை திருப்ப முடியும் என்று தன் ஆய்வுகள் மூலம் நிரூபித்தார் தாம்சன். அவர் விளக்கிய கேத்தோட் ரே டியூப்தான் டெலி விஷன் மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர்களாக உருமாற்றம் பெற்று, இன்று வரை பயன்பாட்டிலும் உள்ளது.
இந்தக் கிளை ஆராய்ச்சிகளால் திருப்தியடையாத தாம்சன், தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா மல் அணுவை தொடர்ந்து ஆராய்ந்து, 1897-ம் ஆண்டு ஏப் ரல் 30-ந் தேதி அன்று எலெக்ட்ரான் என்ற அந்த புதிய அணுத்துகளை உலகுக்கு அறிவித்தார், வாயுக்கள் மின்சாரத்தைக் கடத்தும் என்ற உண்மையையும் அவர் நிரூபித்தார்.
இதற்காக 1906-ல் தாம்சனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 84 வயது வரை கேம்பிரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரி யில் பணியாற்றிய தாம்சன். 1940-ம் ஆண்டு மறைந்தார். பெரிய விஞ்ஞானி என்பதை விட, ஒரு மிகச் சிறந்த ஆசிரியர் என்று தாம்சனைக் குறிப்பிடலாம்.
காரணம், இவரது மாணவர்களில் 7 பேர் பிற்காலத்தில் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றனர் என்பதோடு, இவரது சொந்த மகன் ஜார்ஜ் பாகட் தாம்சனும் அதே இயற்பியலில் நோபல் பரிசு பெற்றார்.
Kidhours – Atom Research Scientist
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.