Sunday, January 19, 2025
Homeசிறுவர் செய்திகள்மனிதர்களைக் கொல்ல ரோபோக்கள் Robots to Kill Humans

மனிதர்களைக் கொல்ல ரோபோக்கள் Robots to Kill Humans

- Advertisement -

Robots to kill humans  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவில் அசாதாரண சூழல்களில் மனிதர்களைக் கொல்ல ரோபோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சான் பிரான்சிஸ்கோ பொலிஸார் விண்ணப்பித்துள்ளது.

நவீன உலகில் ரோபோக்களின் பயன்பாடு பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.உற்பத்தி தொழிற்சாலைகள், நுண்ணறிவு தொழில்நுட்பம், மருத்துவத்துறை உள்பட அனைத்திலும் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன.

- Advertisement -

ராணுவத்திலும் ரோபோக்களை பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாண பொலிஸார், ரோபோக்களை அசாதாரண சூழலில் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றனர்.

Robots to kill humans  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Robots to kill humans  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அமெரிக்காவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு அப்பாவி பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இவ்வாறு பொது இடங்களில் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்களை சமாளிப்பதற்கு ஆயுதம் ஏந்திய பிரத்யேக பொலிஸ் படை பயன்படுத்தப்படுகிறது.

இந்த பிரிவில் ரோபோக்களை பயன்படுத்தி தீவிரவாத தாக்குதல், கலவரம் போன்ற அசாதாரண சூழல்களில் மனிதர்களைக் கொல்ல அவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சான் பிரான்சிஸ்கோ காவல்துறை விண்ணப்பித்துள்ளது.

மேலும் மரண தண்டனைகளை நிறைவேற்றும் பணிகளிலும் ரோபோக்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த விண்ணப்பத்திற்கு சான் பிரான்சிஸ்கோ நகர நிர்வாகக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரோபோக்களை மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்த கொள்கை விதிமுறைகளில் இடமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வரைவுகளில் சில திருத்தங்களை மேற்கொண்டு சான் பிரான்சிஸ்கோ காவல்துறை மீண்டும் விண்ணப்பித்திருக்கும் நிலையில், இதற்கு அனுமதி அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து வரும் 29-ம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

ஏற்கனவே சான் பிரான்சிஸ்கோ காவல்துறையில் 17 ரோபோக்கள் உள்ள நிலையில், வெடிகுண்டுகளை தேடுவது உள்ளிட்ட சவாலான பணிகளுக்கு அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ காவல்துறையின் இந்த முயற்சிக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

 

Kidhours – Robots to kill humans

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.