Mushroom soup பொழுதுபோக்கு சிறுவர் சமையல்
தேவையான பொருட்கள்:
1. பட்டன் காளான் – 20
2. பூண்டு – 10 பல்
3. நெய் – 2 தேக்கரண்டி
4. வெங்காயம் – 1 எண்ணம்
5. வெங்காயத்தாள் – சிறிதளவு
6. பட்டை – 1 துண்டு
7. மல்லித்தழை – சிறிது
8. மிளகுத்தூள் – தேவையான அளவு
9. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், மல்லித்தழை, வெங்காயத்தாள், காளான் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.பூண்டு தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயை அடுப்பில் வைத்துச் சூடானதும் நெய் விட்டுக் காய்ந்ததும், அதில் பட்டை போட்டு தாளித்த பின் அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய காளான் சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடம் வதக்கிய பின்னர் மூன்று கப் நீர் விட்டு தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும்.காளான் வெந்ததும், மிளகைத் தூவி ஒரு கொதி விட்டுப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
Kidhours – Mushroom soup
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.