Putin’s Health சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ரஷிய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதன்படி 70வயதான அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து ரஷிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் புடின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தில், கடந்த வார இறுதியில் புடின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.ஆனால் அதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இதனால் அவருக்கு புதிய சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிகிச்சை வருகிற மார்ச் ஐந்தாம் திகதி தொடங்கப்படுகிறது.
இதன்படி வரும் நாட்களில் புடினின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் பாதிக்கும். அவர் உக்ரைன் விவகாரத்தில் முழுமையாக பங்கேற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து கிரம்ளின் எந்த தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Putin’s Health
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.