Prawn Momos Recipe பொழுதுபோக்கு
மேற்புற மாவுக்கு
கோதுமை மா – முக்கால் கப் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப
தேவையான பொருட்கள்
இறால் – ஒரு கப் (தோல் நீக்கியது)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது) துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
கோதுமையுடன் எண்ணெய், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர்விட்டு மாவாகப் பிசைந்து மூடி போட்டு 30 நிமிடங்கள் தனியே வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் இறாலுடன் இஞ்சி, வெங்காயத்தாள், வெங்காயம், உப்பு சேர்த்து கலந்து தனியே வைக்கவும். மாவை சிறிய, ஒரே அளவான உருண்டைகளாக உருட்டி ஈரத்- துணியில் மூடி தனியே வைக்கவும்.
உருண்டையை எடுத்து லேசாக மா தூவிய பலகை – யின் மேல் வைத்து 2-3 இன்ச் விட்டமுள்ள வட்டமாகத் தேய்த்துக் கொள்ளவும். வட்டத்தின் நடுவில் இறால் கலவையை வைக்கவும். அதை விருப்பமான வடிவில் மடித்துக் கொள்ளவும். இதேபோல் மற்ற மோமோக்களைத் தயார் செய்து, ஆவியில் வேக வைக்கத் தயாராகும் வரை ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
பிறகு இட்லி குக்கரில் வைத்து 5-6 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். இந்த மோமோக்கள் தயாரித்த பிறகு டிரான்ஸ்ப- ரென்ட்டாக இருக்கும். அதாவது அவற்றின் உள்ளே இருப்பது வெளிப்படையாகத் தெரியும்.
இதை சோஸ் அல்லது காய்ந்த மிளகாய் பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.
Kidhours – Prawn Momos Recipe
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.