People About Aliens சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஏலியன்கள் பூமியில் வசிப்பது போன்று சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்புகின்றன.

அந்த வகையில், ட்விட்டரில் இதுபோன்ற ஒரு காணொளி தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது, தான் வருங்காலத்தில் இருந்து காலப்பயணம் செய்து தற்காலத்திற்கு வந்துள்ளதாக கூறி ஒருவர் வெளியிட்ட அந்த டிக்டாக் காணொளி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
எனோ அலரிக் என்ற பயனாளரின் ட்விட்டர் கணக்கில் வெளியான அந்த டிக்டாக் காணொளியுடன் “அனைவரின் கவனத்திற்கு! ஆம், நான் 2671ஆம் ஆண்டில் இருந்து காலப்பயணம் செய்த உண்மையான டைம்-ட்ராவலர்.
இந்த 5 நாள்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் பேசும் நபர், “இன்னும் சில நாள்களில் பூமியில், வேற்று கிரகவாசிகளின் நடமாட்டம் இருப்பது உறுதியாகும்.
இந்தாண்டு டிசம்பர் 8ஆம் தேதி அன்று ஒரு பெரிய விண்கல் மூலம் இந்த பூமியில் வேற்று கிரகவாசிகள் வர இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.
அதாவது, அந்த டிசம்பர் 8ஆம் தேதியை போன்று, அடுத்து வேறு வேறு 4 தினங்களிலும் பூமியை அச்சுறுத்தும் சம்பவங்கள் நடைபெற உள்ளதாக அந்த நபர் கூறுகிறார். மேலும், அந்த தினங்களையும் வரிசையாக குறிப்பிடுகிறார்.
தன்னை வருங்காலத்தில் இருந்து வந்ததாக கூறிக்கொள்ளும் அந்த நபர், முன்னரும் இதுபோன்ற கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதாவது, 3 அடி சிலந்தி, 18 அடி கொண்டு வண்டு, 1 அடியில் எறும்பு ஆகியவை குறித்து அவர் பல்வேறு கணிப்புகளை தெரிவித்துள்ளார். ஆனால், இவையெல்லாம் நடந்ததா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை என கூறப்படுகின்றது.
Kidhours – People About Aliens
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.