Thursday, January 23, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புவெற்றிகரமாக நிலவில் ஓரியன் விண்கலம் வீடியோ Orion Spacecraft

வெற்றிகரமாக நிலவில் ஓரியன் விண்கலம் வீடியோ Orion Spacecraft

- Advertisement -

Orion spacecraft பொது அறிவு செய்திகள்

- Advertisement -

நாசாவின் ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வெள்ளிக்கிழமை நிலைநிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் புளோரிடா மகாணத்திலிருந்து சந்திரனை நோக்கி விண்கலம் புறப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விஞ்ஞானிகள் விண்கலத்தை நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்காக அதனை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கினர்.

- Advertisement -
Orion spacecraft பொது அறிவு செய்திகள்
Orion spacecraft பொது அறிவு செய்திகள்

இந்நிலையில் ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக நாசா தனது அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் தெரிவித்தது. இந்த விண்கலம் வரும் ஆண்டுகளில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை எடுத்துச் செல்ல உள்ளது.

- Advertisement -

அதேவேளை 1972 இல் கடந்த அப்பல்லோ பயணத்திற்குப் பிறகு அதன் மேற்பரப்பில் காலடி எடுத்து வைக்கும் முதல் விண்கலம் இதுவாகும். இந்த முதல் சோதனை விண்கலம் வீரர்கள் இல்லாமல், பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஓரியன் சந்திரனில் இருந்து 40,000 மைல்கள் உயரத்தில் பறக்கும் என்பதால் அதன் சுற்றுப்பாதை தொலைவில் உள்ளது” என்று நாசா தெரிவித்துள்ளது.

அதேசமயம் 25 நாட்களுக்கும் மேலான பயணத்திற்குப் பிறகு, விண்கலம் டிசம்பர் 11 ஆம் திகதி பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டு, பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கும். இந்த பணியின் வெற்றியானது ஆர்ட்டெமிஸ் 2 பணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

இது விண்வெளி வீரர்களை தரையிறங்காமல் சந்திரனைச் சுற்றி அழைத்துச் செல்லும். அதன் பின்னர் ஆர்ட்டெமிஸ் 3, இறுதியாக மனிதர்கள் நிலவில் இறங்கி, பூமிக்கு திரும்பும் திட்டம் தொடங்கப்படும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

மேலும் அந்த பணிகள் முறையே 2024 மற்றும் 2025ல் நடைபெற உள்ளதாக நாசாகுறிப்பிட்டுள்ளது.

 

Kidhours – Orion spacecraft

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.