Friday, January 24, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்பு2022 அமைதிக்கான நோபல் பரிசு Nobel Prize for Peace 2022

2022 அமைதிக்கான நோபல் பரிசு Nobel Prize for Peace 2022

- Advertisement -

Nobel Prize for Peace 2022 பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டிற்கு ஒரு முறை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் வழங்கப்பட்டு வருகிறது.

Nobel Prize for Peace 2022 பொது அறிவு செய்திகள்
Nobel Prize for Peace 2022 பொது அறிவு செய்திகள்

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ்யை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு இரண்டு அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு.

- Advertisement -

மனிதநேய மதிப்புகள் அறிந்து செயல்படுதல், ராணுவ செயல்பாடுகளைத் தடுத்தல், சட்டத்தின் கொள்கைகள் என்ற காரணங்களினால் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம், ரஷ்யா உக்ரைன் மேல் போர் தொடங்கியதில் இருந்து நடக்கும் போர்க் குற்றங்களைப் பற்றித் தொடர்ந்து உலக அரங்கில் வெளிப்படுத்தி வருகிறது. அதற்காக அந்த அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு, மனித உரிமைகளைக் காக்கவும், அதனை வலுப்படுத்தவும் தொடங்கப்பட்டது. மேலும் உக்ரைன் ஜனநாயகம் மேம்படுத்தி வலுப்படுத்த பெரும் பங்கு அளித்துள்ளனர்.

அதற்காக அந்த அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பெலாரஸ்யை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி, 1980களில் பெலாரஸ்யில் நடந்த ஜனநாயகம் இயக்கத்தை முன்மொழிந்தவர்.

அதற்காக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைதிக்கான நோபல் பரிசின் இறுதி பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

2022ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் பெர்ட்டோசி,பேரி ஷார்ப்லெஸ் மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த மார்ட்டன் மெல்டல் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் பெண் எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ்- க்கு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வரும் அக்டோபர் 10 தேதி அறிவிக்கப்படவுள்ளது.

 

KIdhours – Nobel Prize for Peace 2022 , Nobel Prize for Peace 2022 update

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.