Navarathiri Golu கல்வி
இந்த ஆண்டு நவராத்திரியில் எந்த நாளில் கொலு பொம்மைகளை அடுக்க வேண்டும், எந்த முறையில் அடுக்க வேண்டும், கொலு பொம்மைகளை அடுக்கவும், நவராத்திரி வழிபாட்டினை துவக்கவும் நல்ல நேரம் என்ன, நவராத்திரி வழிபாட்டினை எப்படி செய்ய வேண்டும், கொலு வைக்க முடியாதவர்கள் ஒன்பது நாட்களும் எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி கொலு வைக்கும் தத்துவ அடிப்படையிலான முறைமை.
1.முதலாம் படி:
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள்.
2.இரண்டாம் படி :
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
3.மூன்றாம் படி :
மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
4.நாலாம்படி
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
5.ஐந்தாம்படி :
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள.
6.ஆறாம்படி:
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
7.ஏழாம்படி:
மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் போன்றோரின் பொம்மைகள்
8.எட்டாம்படி:
தேவர்கள், அஷ்டதிக்குப் பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் பொம்மைகள்.
9.ஒன்பதாம்படி:
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் வைக்கவேண்டும்.
மேல்தளத்தில் சிவதத்துவ மூர்த்திகள் வைக்கப்பட வேண்டும்.
(சிவலிங்கம், நடராசர்)
Kidhours – Navarathiri Golu
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.