Zip into the Brain சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மனித மூளையில் சிப் பொருத்தி சோதனை செய்யும் முறைக்கு அமெரிக்காவின் FDA அனுமதி அளித்துள்ளதாக எலன் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
மூளையில் சிப் பொருத்துவதன் மூலம் ஆட்டிஸிம், உடல் பருமன், மன அழுத்தம், மனக்கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தலாம் என கடந்த ஆண்டு எலன் மஸ்க் தெரிவித்திருந்தார்.
மிகவும் பாதுகாப்பான முறையில் சிப் பொருத்தப்படும் என்றும், தனது குழந்தைகளுக்கு கூட அதனை பொருத்தலாம் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த பரிசோதனை தொடர்பாக FDA எனப்படும் உணவு மற்றும் மருந்துகள் துறை பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.
லித்தியம் பேட்டரியை உள்ளடக்கிய சிப்பை பொருத்தி எடுப்பதால் மூளையில் உள்ள திசுக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என கேட்டிருந்தது.
இவற்றுக்கு நியூராலிங்க் அளித்த பதில்கள் திருப்தி அளித்ததால் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Kidhours – Zip into the Brain
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.