Young Wildlife Photographer in Tamil தேடல்
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின் லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆண்டு தோறும் Young Wildlife Photographer என்னும் வன விலங்கு புகைப்படக் போட்டியை நடத்துகிறது.
குறித்த போட்டியானது 18 வயதுக்கு கீழேயுள்ளவர்களுக்கான தனியான பிரிவு “இளைய வன விலங்கு (wildlife) புகைப்படக்காரர்” என்று அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் (2024) சிறந்த புகைப்படங்கள் சில குறிப்பிடத்தக்க சம்பவங்களை நினைவுபடுத்துவனவாக காணப்பட்டது
இந்த போட்டியில் புகைப்படங்கள் 10 வயதுக்கும் கீழ், 11-14 மற்றும் 15-17 வயதான மூன்று தனித்தனி வயதுப் பகுதிகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
பத்து வயதுக்கு உற்பட்டவர்களில் வெற்றிபெற்றவர் – அல்பெர்டோ ரோமான் கோம்ஸ்
ஸ்பெயினின் அல்பெர்டோ ரோமான் கோம்ஸ் (Alberto Román Gómez) , சியரா டி கிராசலெமா நாச்சரல் பார்க் அருகே தனது father’s கார் அருகில் உட்கார்ந்திருந்த போது, ஒரு இளம் பறவை ஒன்றை கண்டார் (stonechat). இந்த பறவை உயரத்தில் அமர்ந்து,( பூச்சிகளை) உணவை உட்கொள்ள கண்காணித்து கொண்டிருந்தது.
பறவை தொடர்ந்து பூச்சிகளை உண்ணும் புகைப்படத்தை எடுத்துவிட வேண்டும் என்று அல்பெர்டோ மிகவும் முயற்சி செய்தார் . அல்பெர்டோ காரில் தனது தந்தை அருகே இருந்துகொண்டு மனித சூழலில் பறவையின் இயற்கை நடவடிக்கைகளை (wild nature) அடையாளம் கண்டு பதிவுசெய்ததால்,இந்த பரிசுகளை பெற்றார்..
நான்கு வயதிலிருந்தே, அல்பெர்டோ தனது தந்தையுடன் இயற்கை பூங்காக்களில் தாமாகவே சென்றுவருபவர் இப்போது, உயர் தரமான கேமராவில் புகைப்படங்களை எடுப்பதில் மிகவும் ஆர்வமும் மகிழ்ச்சியும் அடைகிறார்.
11 தொடக்கம் 14 வயது வரையான போட்டியாளர்களின் பரிப்பெற்றவர் .
பர்ஹாம் பௌரஹ்மத், அமெரிக்கா
க லிஃபோர்னியாவில் வாழும் பார்ஹாம் பூராஹ்மாத் தனது வீட்டின் அருகில் உள்ள பூங்காக்களை செல்வது ஒரு பழக்கமாக வைத்துள்ளார்.எப்பொழுதும் வேலைப்பளு நிறைந்த நகரங்களில் இயற்கை உயிரினங்கள் எப்படி இருக்கின்றன என்பதைக் காட்டுவதை அவர் விரும்புகிறார். அவர் செல்லும் பூங்காக்களில் சூரிய ஒளியின் அழகிய தோற்றத்தை , படம் பிடித்துக்கொள்வார் அதன்போது பருந்து ஒன்று அணில் ஒன்றை பிடித்து உண்ணும் புகைப்படத்தை எடுத்தார்.
அந்த புகைப்படத்தின் அமைப்பு மற்றும் சூரியனின்
ஒளியின் தன்மை பருந்தின் செயற்பாடு என்பவற்றை மிக அழகாக வெளிக்காட்டியமையால் நடுவர்கள் பார்ஹாம் புகைப்படத்தை பாராட்டினர்.
15 தொடக்கம் 17 வயது வரையான போட்டியாளர்களின் பரிப்பெற்றவர் .
அலெக்சிஸ் தின்கேர்-டீஸவ்லஸ், ஜெர்மனி
ஜெர்மனியாவின் அலெக்சிஸ் டிங்கர்-ட்ஸாவலஸ், உள்ளூர் காடுகளில் நடக்கும் போது, காணப்பட்ட எறும்புபோன்ற போச்சி இனம் ஒன்றை தத்துருவமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
மிகவும் சிறிய விஷயங்களைப் புகைப்படம் எடுக்கும்போது கவனத்தை சரியான நிலையில் வைப்பது எளிதல்ல என்பதால், மதிப்பீட்டாளர்கள் அலெக்சிஸின் படத்தை பாராட்டினர்..
Kidhours – Young Wildlife Photographer
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.