Yoga Guinness Record சிறுவர்களுக்கான உலக செய்திகள்
3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி முதல் நாளான நேற்று நியூயார்க் நகர் சென்றடைந்தார். அங்கு முன்னணி பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பின்னர் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா தின கொண்டாட்டத்தில் தலைமை தாங்கி பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து இன்று நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு வாஷிங்டன் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு அரசு விருந்தில் பங்கேற்றார். வெள்ளை மாளிக்கைக்கு சென்ற பிரதமர் மோடியை, நுழைவாயிலில் காத்திருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைத்துச் சென்றார்.
அப்போது, விருந்து தயாராக உள்ளது என்று பைடன் கூறியதும், நீங்கள் தான் நீளமான பட்டியலே வைத்திருக்கிறீர்களே என பிரதமர் கூறி, சிரிப்பலையை ஏற்படுத்தினார். பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
இதை குறிக்கும் வகையில், வெள்ளை மாளிகையில் பிரதமருக்கு அளிக்கப்படும் விருந்தில் அதிக அளவிான திணை பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இரவு விருந்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜில் பைடன், தங்களது விருந்தோம்பலை பறைசாற்றும் வகையில் சைவ உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விருந்தில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோருடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவான் ஆகியோரும் பங்கேற்றனர்.
Kidhours – Yoga Guinness Record
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.