World Plowing Scams Countries
உலகில் ஊழல் மோசடிகளற்ற நாடுகள் தொடர்பிலான பட்டியலில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது. ஊழல் மோசடிகளற்ற நாடுகளின் வரிசையில் இலங்கை 115ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் மோசடிகளற்ற நாடுகள் தொடர்பிலான மதிப்பாய்வு புள்ளிகளாக இலங்கைக்கு 34 புள்ளிகள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன.
கடந்த 2022ம் ஆண்டை விடவும் 2023ம் ஆண்டில் இரண்டு நிலைகள் பின்தள்ளப்பட்டுள்ளன.கடன் சுமை மற்றும் அரசியல் ஸ்திரமற்றதன்மைகளினால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் இந்த பட்டியலில் பின்னிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
![உழல் மோசடிகளற்ற நாடுகளின்பட்டியல் World Plowing Scams Countries 1 World Plowing Scams Countries](https://www.kidhours.com/wp-content/uploads/2024/01/24-65b9d6b536ec5.jpg)
ஊழல் மோசடிகளற்ற நாடுகளின் வரிசையில் டென்மார்க் முதல் இடத்தையும், பின்லாந்து இரண்டாம் இடத்தையும், நியூசிலாந்து மூன்றாம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவு ஊழல் மோசடிகள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் சோமாலியா முன்னணி வகிக்கின்றது.
Kidhours – World Plowing Scams Countries
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.