World Mental Health Day உலக மனநல தினம் அக்டோபர் 10
மனிதர்களின் மனநலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், மனக்குழப்பங்கள் போன்றவற்றிற்கு காரணம் துர் சக்திகள் என பல நாடுகளிலும் ஆண்டாண்டு காலமாக நம்பப்பட்டு வந்தது.
ஆனால் 1800களில் டாக்டர் பெஞ்சமின் ரஷ் என்பவர்தான் மனநல பிரச்சினைகளுக்கு மூளையே காரணம் என்றும், துர்சக்திகள் காரணமில்லை என்றும் நம்பினார். மனோதத்துவவியல் என்ற புதிய முறை தொடங்கவும் அவர் வழிவகுத்தார்.
மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக மனநல தினம் முதன்முறையாக அக்டோபர் 10, 1992 அன்று அனுசரிக்கப்பட்டது. இது 150க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகளாவிய அமைப்பான மனநலத்திற்கான உலகக் கூட்டமைப்பின் ஒரு முன்முயற்சியாகும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் முதன்மை நோக்கமாக கொள்ளப்பட்டது.
1994 ஆம் ஆண்டில், உலக மனநல தினம் ‘உலகம் முழுவதும் மனநல சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல்’ என்ற ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் முதல் முறையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், ‘உலகளாவிய முன்னுரிமையாக அனைவருக்கும் மனநலம் மற்றும் நல்வாழ்வை ஏற்படுத்துதல்’ என்பதாகும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி , இந்த நாள் மனநலப் பிரச்சினைகளில் பணிபுரியும் அனைவருக்கும் தங்கள் வேலையைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் துறையில் எடுக்கும் முயற்சிகள் எவ்வளவு முக்கியமானவை மற்றும் இன்னும் எவ்வளவு செய்ய வேண்டும் என்பதற்கான முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
Kidhours – World Mental Health Day Oct 10 , World Mental Health News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.