World Largest Anaconda சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகின் மிகப்பெரிய பாம்பு என அறியப்படும் 26 அடி நீள அனகோண்டா கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அனகோண்டா வேட்டைக்காரர்கள் குழுவால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அமேசான் காடுகளின் பழங்குடியினரால் வழிநடத்தப்பட்ட 15 விலங்கியல் வல்லுநர்கள் கொண்ட சர்வதேச குழு, கடந்த பெப்ரவரியில் அமேசான் நதியின் துணை நதியில் இந்த மிகப்பெரிய அனகோண்டாவைக் கண்டுபிடித்தனர்.
இந்த பெண் அனகோண்டாவுக்கு ‘அன்னா ஜூலியா’ என்று பெயரிடப்பட்டது.அனகோண்டாக்கள் உலகின் மிகப்பெரிய பாம்புகளாக கருதப்படுகின்றன. அதிலும் , ‘அன்னா ஜூலியா’ உலகின் மிகப்பெரிய அனகோண்டாவாகக் கருதப்பட்டது.
![கொல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய அனகோண்டா World Largest Anaconda 1 World Largest Anaconda சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/03/Untitled-design-43.jpg)
‘அன்னா ஜூலியா’ ஒரு வடக்கு பச்சை அனகோண்டா ஆகும், மேலும் வடக்கு பச்சை அனகோண்டாக்கள் அனகோண்டாவின் புதிய இனம் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Kidhours – World Largest Anaconda
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.