tamil kids news siruvar seithigal சிறுவர்களுக்கான உலக செய்திகள்
39 மனைவிகளும் , 94 குழந்தைகளும் , 33 பேரக்குழந்தைகள் உள்ள உலகில் மிக பெரிய குடும்பத்தின் குடும்பத்தலைவரான ஜியோனா சானா(ziona chana) (வயது 76) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜியோனா சானா 1945ஆம் நாடு ஜூலை 21ஆம் திகதி பிறந்துள்ளார். தனது 17ஆவது வயதில் முதல் திருமணத்தை செய்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் இறக்கும் வரையில் 38 பேரை திருமணம் செய்துள்ளார்.இவர் தான் திருமணம் செய்த 39 பேருடனும் , அவரது 94 பிள்ளைகளும் , 33 பேரக்குழந்தைகளும் அந்த வீட்டிலேயே வசித்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் வீட்டில் ஒரு சமையல் அறை தான். அங்கு தான் இவர்கள் அனைவருக்குமான உணவு தயாரிக்கப்படுமாம். அத்துடன் ‘ சானா பாவ்ல் ‘ எனும் கிறிஸ்தவ மத குழுவின் தலைவராகவும் ஜியோனா இருந்துள்ளார்.

குறித்த மத குழு பலதார மணத்தை ஊக்குவிப்பிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தான் 39 திருமணங்களை செய்த போதிலும் , மனைவி மார்களுக்கு இடையிலையோ பிள்ளைகளுக்கு இடையிலையோ சண்டைகள் ஏற்பட்டதில்லை என பல ஊடக நேர்காணல்களில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை ஜியோனா வசித்து வந்த மிசோராம் மாநிலத்தில் பக்தாங் லாங்னுவாம் எனும் கிராமம் இவரின் குடும்பத்தை பார்க்க என பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தளமாக விளங்கி வந்துள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை