World Bank சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கொரோனா காலத்தில் ஏற்பட்ட பெரு முடக்கம் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. இந்த பொருளாதார நெருக்கடியால் உணவு தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல சிக்கல்களை உலக நாடுகள் சந்தித்தன.
தற்போது உலக பொருளாதாரம் மெல்ல நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் நிலையில், இந்த ஆண்டு உலகின் வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் இந்த ஆண்டு ஏழை நாடுகளுக்கு உலக வங்கி அளிக்கும் நிதி உதவியை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார ஆண்டறிக்கையில் எந்தெந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும், எதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்ற விபரங்களை ஊகங்களின் அடிப்படையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக வங்கியின் ஊகம் மெய்ப்பட்டால் இந்த ஆண்டு ஏற்படப் போகும் பொருளாதார நெருக்கடி மிக மோசமானதாக இருக்கும். உலகமே பொருளாதார நெருக்கடியை சந்தித்தாலும் அமெரிக்கா இதிலிருந்து ஓரளவு தப்பிக்கும் என்றும் அமெரிக்காவின் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 0.5 விழுக்காடாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
ஆனால் சீனாவுடனான பொருளாதார மற்றும் அரசியல் மோதல் போக்கும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரும் நீடிக்குமனால் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு சிக்கல் தான் என்றும் எலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், சீனாவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் சீனாவின் பெரிய ஏற்றுமதி நாடுகளான ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலை வரலாம் எனவும் உலக வங்கி அறிவித்துள்ளது.
ரஷ்ய-உக்ரைன் போரால் உலக நாடுகளில் உணவு தட்டுப்பாடு மற்றும் உணவு பொருள்களின் விலை ஏற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் உலகின் பெரிய நாடுகள் விதித்துள்ள வட்டி உயர்வும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருக்கும் என்றும் உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடியால் ஏழை நாடுகள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்றும் ஏழை நாடுகளில் உணவு, உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரப்போகும் பொருளாதார நெருக்கடியால் உலக அளவில் முதலீடுகள் பாதிக்கப்படும் எனவும் உலக அளவில் தனி மனித வருமானத்தின் வளர்ச்சி 1.2 விழுக்காடடு என்கிற அளவில் மட்டுமே இருக்கும் என்றும் உலக வங்கியின் தலைவர் டேவிட் மேப்ளாஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பெரும்பாலான உலக நாடுகளுக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்தை பொருத்தவரை மிகவும் கடுமையான ஆண்டாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டினா ஜியார்ஜியோவும் அறிவுறுத்தியுள்ளார்.
Kidhours – World Bank, World Bank news
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.