tamil kids news சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கடந்த 1095ம் ஆண்டில் தான் தென் ஆப்ரிக்க நாட்டில் உலகின் மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாக இருந்தது. இதன் பின்னர், 2015ம் ஆண்டு ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வைரம் 1,109 காரட் அளவு கொண்டதாக இருந்தது.
இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ள இந்த வைரக்கல் கடந்த 1-ம் தேதி அரசு துணையுடம் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரக்கல்லை கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின்னர் ஏலம் விட போஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது. வைரத்தை ஏலம் விடுவதில் கிடைக்கும் பணத்தின் மூலம் கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
kidhours – tamil kids news siruvar seithigal
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை