Tamil Kids News World சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வெப்ப நிலை 113 டிகிரி பாரன்ஹீட்டை கடந்ததால் கடும் அனல் காற்று வீசி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரித்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சினர். ஆனால், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள டெத் வேலி தேசிய பூங்கா பகுதியே உலகின் அதிக சூடான பகுதியாக இருக்கிறது.
33 லட்சத்து 73 ஆயிரத்து 63 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பூங்கா, வட அமெரிக்கா கண்டத்திலேயே உள்ள சூடான, வறண்ட இடமாகும். உச்சபட்ச வெப்பநிலை பதிவாகும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த பகுதியில் நடந்து செல்வதே நெருப்பில் இறங்கி நடப்பதை போல் இருக்குமாம். கடந்த 300 ஆண்டுகளாக ஆகஸ்ட் மாதத்தில் 110 முதல் 125 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி வருகிறது.
இரவு நேரத்தில் சற்று குறைந்து 90 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. 1849- ஆம் ஆண்டு தங்க வயல் தேடி வந்த ஐரோப்ப அமெரிக்கர்களில் ஒரு குழுவினர் வழி தவறி இங்கு வந்து இறந்துவிட்டதால், இவ்விடத்திற்கு டெத் வேலி என்று பெயரிடப்பட்டுள்ளது.
டெத் வேலியில் 1913-ம் ஆண்டின் ஜூலை 10-ம் தேதி பூமியின் அதிகபட்ச வெப்பநிலை 134 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தது. அவ்வளவு சூடான வெப்பநிலையிலும் கூட பல வகை உயிரினங்கள் இந்த பூங்காவை தங்களின் உறைவிடமாகக் கொண்டுள்ளன. இந்த பூங்காவில் 80 குடும்பங்களை சேர்ந்த 300 பேர் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பூங்காவிலும், அங்குள்ள உணவகங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
பெரும்பாலான வீடுகளில் ஏசி மற்றும் ஏர் கூலர் பயன்படுத்துகின்றனர்.
காரில் வெளியே செல்லும்போது சேட்டிலைட் செல்போன், 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் பாட்டில்களை உடன் எடுத்து செல்கின்றனர். காரை பரிசோதித்த பிறகே இயக்குவது, ஒருவேளை நடுவழியில் பழுதடைந்துவிட்டால் மெக்கானிக் வரும் வரை காருக்குள்ளேயே அமர்ந்துகொள்வது, இரவு நேரங்களில் மட்டும் விளையாடச் செல்வது என்பன போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுவதாகவும் டெத் வேலி மக்கள் கூறுகின்றனர்.
டெத் வேலி பூங்காவிற்கு ஆண்டு முழுவதும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று பூங்கா நிர்வாகத்தினர் அறிவுறுத்துகின்றனர். கோடை காலத்தில் காரில் பயணம் செய்தபடியே பூங்காவை சுற்றி பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
நமது உடல் தீவிர வெப்பத்திற்கு ஏற்ப மாறிக் கொள்ளாதபோது அதிக வியர்வை
வெளியேறுவது, உடல் சோர்வு, உடல் வெப்பநிலை அதிவேகமாக அதிகரிப்பது போன்ற தாக்கங்கள் ஏற்படும் என்றும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் அங்கேயே தங்கியிருந்தால் சில வாரங்களுக்கு பிறகு உடலின் உள்வெப்ப நிலை குறைந்து, தோலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் விதமாக ரத்த நாளங்கள் தகவமைத்துக் கொள்ளும் என்றும் அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். வெப்பநிலை மாற்றங்கள் சக குடியிருப்பாளர்களுடன் தொடர்புகொள்வதை கடினமாக்கியுள்ளதாகவும் டெத் வேலி பூங்கா மக்கள் கவலை தெரிகின்றனர்.
kidhours – Tamil Kids News World , Tamil Kids News World update , Tamil Kids News World portal
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.