Womens achievement சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சவூதியின் முதல் பெண் சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தராய் நியமித்துள்ளது .
இந்நிலையில் சவூதி அரேபியாவின் முதலாவது சர்வதேச பெண் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக 34 வயதான அல்மாரி கூறியுள்ளார்.
மகளிர் விளையாட்டுத்துறையை சவூதி அரேபியா வேகமாக முன்னேற்றி வருகிறது. அந்தவகையில் 2021 நவம்பரில் பெண்கள் கால்பந்தாட்ட லீக் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவின் முதலாவது பெண்கள் தேசிய கால்பந்தாட்ட கடந்த பெப்ரவரி மாதம் தனது முதல் போட்டியில் விளையாடியது. சீஷெல்ஸ அணியுடனான அப்போட்டியில் 2:0 கோல்களால் சவூதி அரேபியா வென்றது
சவூதி அரேபிய அணிக்கு ஜேர்மனியின் முன்னாள் வீராங்கனை மோனிக்கா ஸ்டாப் பயிற்சி அளித்திருந்தார். அதேவேளை 2026 ஆம் மகளிர் ஆசிய கிண்ண சுற்றுப்போட்டியை தனது நாட்டில் நடத்துவதற்கும் சவூதி அரேபியா விண்ணப்பித்துள்ளது.
Kidhours- Womens achievement
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.