Women Cricket சிறுவர்களுக்கான உலக செய்திகள்
19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஐசிசி இருபது 20 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதவுள்ளன.
முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி தென் ஆபிரிக்காவில் நடைபெறுகிறது.
16 அணிகள் பங்குபற்றி இச்சுற்றுப்போட்டியின் அரை இறுதிப் போட்டிகள் நேற்றுமுன்தினம் நடைபெற்றன.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் நியூ ஸிலாந்தை இந்தியா 8 விக்கெட்களால் வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூ ஸிலாந்து, 9 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களைப் பெற்றது.
Kidhours – Women Cricket
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.