Wireless hard disk சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மிகப்பெரிய தரவுகளை சேமிக்க, அதை பரிமாற்றம் செய்ய உதவியாக இருக்கும் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் (External hard disk), இப்போது வயர்லெஸ் வசதியுடன் கிடைக்கிறது. எஸ்.எஸ்.கே. நிறுவன தயாரிப்பான இது, வை-பை ஹாட்ஸ் பாட் மூலம் கணினி மற்றும் ஸ்மார்ட் போனுடன் இணைந்து தகவல்களை பரிமாற்றுகிறது.
இதை வயர்லெஸ் முறையுடனும், வயர் முறையிலும் கணினியுடன் இணைக்கலாம். மேலும் நினைவக அட்டைகளையும் நேரடியாக, இந்த எக்ஸ்டர்னஸ் ஹார்ட் டிஸ்க்குடன் இணைக்க முடியும். 1 டி.பி. நினைவக திறன் கொண்ட இது, ஆட்டோபேக்கப் வசதியுடன் கிடைக்கிறது. அதனால் ஹார்ட் டிஸ்கில் சேமிக்கும் தகவல்கள் நீண்ட காலத்திற்கு பத்திரமாக இருக் கும். இதன் விலை 14,159.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.