WHO about Cancer சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகத்தையே கையுக்குள் கொண்டு வந்திருக்கும் செல்போன் பாவனையால் அனைத்து வயதினரும் இதன் பயன்பாட்டில் அடிமையாகியுள்ளனர் என்பது யாராலும் மறுக்க முடியாது.
இந்த செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று பேசப்படுகிறது. மூளை புற்றுநோய் தாக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது இதனையடுத்து தொடர்ந்து மாறுபட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்துவரும் நிலையில்
உலக சுகாதார அமைப்பு மற்றும் இதர சர்வதேச சுகாதார அமைப்புகள், செல்போன் பயன்பாட்டுக்கும், பல்வேறு உடல் உபாதைகளுக்கும் சம்பந்தம் இருப்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று கூறி வந்துள்ளன.
இருப்பினும், இவை தொடர்பாக விரிவான ஆய்வு நடத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, செல்போன் பயன்பாட்டுக்கும், மூளை புற்றுநோய்க்கும் சம்பந்தம் உள்ளதா என்று அறிய ஆய்வு நடத்தியது.இந்த ஆய்வில் 10 நாடுகளை சேர்ந்த 11 ஆய்வாளர்கள் இதில் பங்கேற்றனர் அத்துடன் ஆஸ்திரேலிய அரசின் கதிரியக்க பாதுகாப்பு குழுவும் பங்கேற்றது.
குறித்த ஆய்வானது கடந்த 1994-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட 63 ஆய்வுகளின் முடிவுகளும் இந்த ஆய்வில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.செல்போன் பயன்படுத்துவதற்கும், மூளை புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகரிப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்பட்டது.
நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன் பயன்படுத்தி வருபவர்களுக்கும் கூட இது பொருந்தும்.
செல்போன் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற்போல், மூளை புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கவில்லை. இதில் இருந்தே இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறிய முடிகின்றது.என்பதனை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளது .
Kidhours – WHO about Cancer
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.