What happened Submarine? சிறுவர்களுக்கான உலக செய்திகள்
1912இல் டைட்டானிக் என்ற பிரம்மாண்ட சொகுசு கப்பல் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போது ராட்சத பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த கப்பலின் சிதைந்த பாகங்கள் 1985இல் கண்டுபிடிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து கப்பல் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வந்த நிலையில், 1997இல் இதை அடிப்படையாகக் கொண்டு டைட்டானிக் என்ற பிரம்மாண்ட திரைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த படத்தின் அபார வெற்றிக்குப் பின்னர் டைட்டானிக் குறித்து உலகம் முழுவதும் ஆர்வம் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன் கேட் என்ற நிறுவனம் அட்லான்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க ஆழ்கடல் சுற்றுலா என்பதை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளது.இந்த டைட்டானிக் ஆழ்கடல் சுற்றுலாவுக்கு கடந்த ஜூன் 19ஆம் தேதி பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான ஹமிஷ் ஹார்டிங் சென்றுள்ளார்.
இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோருன் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த மூன்று பயணிகளுடன் நீர் மூழ்கி கப்பலின் பைலட் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேரும் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று கடலுக்கு அடியில் சென்றுள்ளனர்.
நீருக்கு அடியில் சென்ற 1.45 மணிநேரத்திலேயே இவர்கள் சென்ற கப்பல் தொடர்பை இழந்து மாயமானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்க, கனடா கடற்படை மற்றும் விமானப் படையினர் கடந்த 2 நாள்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றும் தீவிரமாக தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது கடலின் அடி ஆழத்தில் இருந்து ஒலி சத்தங்கள் சிக்னல்களாக கிடைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணியில் சோனார் கருவி பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த கருவி மூலம் இந்த ஒலி சிக்னல்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த தகவலை அமெரிக்க கடற்படைக்கு அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர். இந்த சிக்னல் மாயமான நீர்மூழ்கி கப்பலில் இருந்து தான் வருகிறதா என்பது உறுதியாகாத நிலையில், ஒலி வந்த பகுதியை அடிப்படையாகக் கொண்டு அங்கு தேடுதல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Kidhours – What happened Submarine?
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.