Tamil Kids News Website சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக முதல் முறையாக கறுப்பினப் பெண்மணி ஒருவர் பதவியேற்றுள்ளார். 51 வயதான கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் (Ketanji Brown Jackson) வியாழன் அன்று பதவியேற்றதைத்த தொடர்ந்து, அமெரிக்க வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதியான முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையைப் அவர் பெற்றார்.
அமெரிக்காவில் பசுமை இல்ல வாயுக்களை ஒழுங்குபடுத்துவதற்கான அரசாங்க அதிகாரங்களை கட்டுப்படுத்தியும், கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள இந்த சூழலில், கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் (Ketanji Brown Jackson) உச்ச நீதிமன்றத்தில் பதவியேற்றுள்ளார்.
அவர் தற்போது 6-3 கன்சர்வேடிவ் பெரும்பான்மையைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தாராளவாத குழுவில் சேருவார். தாராளவாத நீதிபதி ஸ்டீபன் பிரேயர் ஓய்வு பெற்ற பிறகு, ஜாக்சன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
“அமெரிக்காவின் அரசியலமைப்பை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், பயம் அல்லது தயவு இல்லாமல் நீதியை வழங்குவதற்கும் முழு மனதுடன் நான் பொறுப்பேற்கிறேன்” என்று ஜாக்சன் (Ketanji Brown Jackson) உறுதியளித்துள்ளார்.
அதேசமயம் கொலம்பியா சர்க்யூட் மாவட்டத்திற்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஓராண்டுக்குப் பிறகு ஜாக்சன் (Ketanji Brown Jackson) ஜனாதிபதி ஜோ பைடனால் (Joe Biden0 தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதற்கு முன்னர் , அவர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கூட்டாட்சி மாவட்ட நீதிபதியாக இருந்தார். செனட் இறுதியாக இந்த ஆண்டு ஏப்ரல் 7-ஆம் திகதி அவருக்கு ஆதரவாக 53-47 வாக்குகளுக்குப் பிறகு அவரது நியமனத்தை உறுதிப்படுத்தியது.
அதேவேளை கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் (Ketanji Brown Jackson) 116-வது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids News Website
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.