Tamil Kids News Website சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நிலவில் தண்ணீர் வளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.அண்டை நாடான சீனா, கடந்த 2020 ஆம் ஆண்டு, ‘சாங்கி – 5’ என்ற ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் இதுவரை யாரும் ஆராய்ந்திராத ‘புயல் கடல்’ என்ற பகுதியில் தரையிறங்கியது. அத்துடன், அங்கிருந்து 1,731 கிராம் மண் மற்றும் கற்களை சேகரித்து பூமிக்கு திரும்பியது. இந்த மண் மாதிரியை சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
‘நேச்சர்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது
நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில் ‘அபடைட்’ என்ற படிகம் போன்ற கனிமப் பொருள் காணப்படுகிறது. அதில் ‘ஹைட்ராக்சில்’ என்ற வடிவத்தில் தண்ணீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சூரியக் கதிரின் தாக்கத்தில் ஏற்பட்ட ரசாயன மாற்றங்களால் நிலவில் பெரும் பகுதி நீர்வளம் உருவாகி உள்ளதாக கருதப்படுகிறது. இந்த ஆய்வின் வாயிலாக நிலவில் நீர் வளம் இருந்திருப்பது புலனாகிறது. எனினும் நீர் வளம் எப்படி உருவானது என்பது குறித்து ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
kidhours – Tamil Kids News Website
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.