Monday, December 23, 2024
Homeசிறுவர் செய்திகள்உடனடியாக சண்டையை நிறுத்துங்கள் வலியுறுத்தும் உலக நாடுகள் Warning All Countries

உடனடியாக சண்டையை நிறுத்துங்கள் வலியுறுத்தும் உலக நாடுகள் Warning All Countries

- Advertisement -

Warning All Countries  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கடந்த 7 ஆம் திகதி ஆபித்து 19 நாட்களாக தொடரும் போரை உடனடிச் நிறுத்துமாறு அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் இஸ்ரேலையும் ஹமாஸையும் வலியுறுத்தியுள்ளன.

காஸா வட்டாரத்துக்குள் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருள்களைக் கொண்டுசெல்ல அந்தச் சண்டை நிறுத்தம் அவசியம் என்று அவை கூறியதாக AFP செய்தி வெளியிட்டது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டை 3ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் உலகத் தலைவர்கள் சண்டை தொடர்ந்து பரவாமல் இருப்பதைத் தடுக்க முற்படுகின்றனர்.

- Advertisement -

 

- Advertisement -
Warning All Countries  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Warning All Countries  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

நேற்று (24 அக்டோபர்) தண்ணீர், உணவு, மருந்துப் பொருள்களை ஏற்றியிருந்த 8 லாரிகள் காஸாவுக்குள் மீண்டும் அனுப்பப்பட்டன.
ஆனால் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் அந்தப் பகுதிக்கு 20 மடங்கு அதிகமாக உதவிப் பொருள்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் இதற்குமுன்னர் கூறியிருந்தது.

அதேவேளை ஹமாஸ் இதுவரை 4 பிணையாளிகளை விடுவித்துள்ள நிலையில் அமெரிக்கா – இஸ்ரேல் இரட்டைக் குடியுரிமையை வைத்துள்ள தாயும் மகளும் அவர்களில் அடங்குவர். இரு தரப்பு போரால் பெண்கள் குழந்தைகள் உட்பட 7000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

Kidhours – Warning All Countries

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.