Tamil Kids News Virus சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கடந்த 1970 மற்றும் 1980-களில் உலகையே புரட்டிப் போட்ட நோய் இளம்பிள்ளை வாதம். தீவிர மருத்துவ நடவடிக்கைகளினாலும், பரவலான தடுப்பூசி பயன்பாட்டினாலும் போலியோ தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரின் கழிவுநீரில் தற்போது வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லண்டனில் கடந்த 1984 ஆம் ஆண்டு கடைசியாக போலியோ தொற்று கண்டறியப்பட்டது. 2003 ஆம் ஆண்டு பிரிட்டன் போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் நகரில் போலியோ பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
கடந்த பிப்ரவரியில் வடக்கு மற்றும் கிழக்கு லண்டனில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டதாக பிரிட்டன் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்னர் அதே பகுதியில் இரு மாதங்களுக்குப் பிறகு அதாவது ஏப்ரல் மாதத்தில் போலியோவின் உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது.
இத்தனை ஆண்டுகளில் போலியோவின் அறிகுறிகளைக் கண்டறியாதது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இதுவரை போலியோ பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை எனவும், தடுப்பூசி செலுத்தியவர்களிடையே தொற்று பரவ வாய்ப்பு குறைவு எனவும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேற்கு லண்டனில் உள்ள ஹில்லிங்டனில் பதின்ம வயதில் உள்ளவர்களில் 35 சதவீதமர் பேர் மட்டுமே போலியோ தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
kidhours – Tamil Kids News Virus ,Tamil Kids News Virus update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.