Friday, November 1, 2024
Homeகல்விவிஞ்ஞானம்அதிர்ச்சி தகவல் உருகும் பனிப்பாறைகளில் படிந்துபோன வைரஸ் Virus In Glaciers

அதிர்ச்சி தகவல் உருகும் பனிப்பாறைகளில் படிந்துபோன வைரஸ் Virus In Glaciers

- Advertisement -

Virus In Glaciers சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகெங்கிலும் காலநிலை மாற்றம் காரணமாக துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.

அப்படி உருகிய பின்னர் அதன் அடியில் இருக்கும் மண்ணின் மரபணு பகுப்பாய்வு வைரஸ் கசிவு மற்றும் வைரஸ்கள் பரவல் அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளது.

- Advertisement -

வைரல் ஸ்பில்ஓவர் என்பது ஒரு புதிய ஹோஸ்டை எதிர்கொள்ளும் போது, ​​ஒரு வைரஸ் அதைத் தாக்கி, இந்தப் புதிய ஹோஸ்டில் நிலையாகப் பரவும் ஒரு செயல்முறையாகும்.

- Advertisement -
Virus In Glaciers சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Virus In Glaciers சிறுவர்களுக்கான உலக செய்திகள்

Proceedings of the Royal Society B: Biological Sciences இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் , காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை வேகமாகப் பாதித்து வரும் நிலையில் கிருமிகள் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர்.

பனிப்பாறைகளில் அடைபட்டிருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை நிரந்தரமாக உறைய வைக்கும் சூழல் மாறுவதால் அது மீண்டும் உயிர்பெற்று பரவும்.

வைரஸ்கள் அது வளரும் சூழ்நிலை கிடைக்கும் வரை வெறும் கல்லையும் மண்ணையும் போல் இருக்கும். சூழல் கிடைத்துவிட்டால் சட்டென்று உயிர்பெற்றது போல் பரவத்தொடங்கும்.

இதனால் பனிப்பாறைகள் உருகுவது விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. இது நேரடியாகவோ விலங்குகள் மூலமாகவோ பெரும் தோற்று வாய்ப்பை ஏற்படுத்தும்.

ஒரு குழு உலகின் மிகப்பெரிய உயர் ஆர்க்டிக் நன்னீர் ஏரியான லேக் ஹசென் ஏரியிலிருந்து மண் மற்றும் வண்டல் மாதிரிகளை சேகரித்து, ஆர்என்ஏ மற்றும் டிஎன்ஏவை வரிசைப்படுத்தியது. அதில் வைரஸ்களின் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

விஞ்ஞானிகள், 2021 இல் பனிப்பாறைகளைப் சோதிக்கும்போது, ​​15,000 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்திருந்த 33 வைரஸ்களைக் கண்டுபிடித்தனர். அவற்றில் 28 அறியப்படாத புதிய வகை வைரஸ்கள்.

இதேபோல், புவி வெப்பமடைதல் காரணமாக உருகும் திபெத்திய பனிப்பாறையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

Kidhours – Virus In Glaciers

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.