Very Poor Countries சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஒருபுறம் வெளிச்சம் இருந்தால் மறுபுறம் இருள் நிகழும் என்பது உலக நியதி. இன்றும் ஒரு வேளை கைநிறைய உணவு சரியாக கிடைக்காத பல நாடுகள் உலகில் உள்ளன. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு சரியான உணவு கூட வழங்கப்படாத அளவுக்கு அந்த நாடுகளில் நிலைமை மோசமாக உள்ளது.
அந்த நாடுகள் கல்வியறிவின்மை, வறுமை, பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், உலகின் ஏழ்மையான நாடுகளைப் பற்றி நாம் பார்க்கப்போகிறோம்.
தெற்கு சூடான்: ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் உலகின் ஏழ்மையான நாடு. தெற்கு சூடானில் 11 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்கின்றனர். தெற்கு சூடானின் தலைநகரம் ஜூபா. 2011-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்நாடு உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது.
எண்ணெய் வளம் அதிகம் உள்ள போதிலும், தெற்கு சூடான் அதன் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்தவில்லை.
புருண்டி: உலகின் இரண்டாவது ஏழ்மையான நாடு புருண்டி. இந்த நாடு நீண்டகாலமாக உள்நாட்டுப் போரை சந்தித்து வருகிறது. இங்கு 80 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை விஷயங்களுக்காக புருண்டி நாடு இன்னும் போராட வேண்டியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க குடியரசு: மத்திய ஆப்பிரிக்க குடியரசு உலகின் மூன்றாவது ஏழ்மையான நாடு. ஆனால், தங்கம், எண்ணெய், யுரேனியம், வைரம் என பல மதிப்புமிக்க ரத்தினங்கள் இருந்தாலும், இந்த நாடு வறுமையில் சிக்கித் தவிக்கிறது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 55 லட்சம் ஆகும்.சோமாலியா: உலகின் நான்காவது ஏழை நாடு சோமாலியா. நாடு முழுவதும் உறுதியற்ற தன்மை, இராணுவ கொடுங்கோன்மை மற்றும் கடற்கொள்ளையர் பயங்கரவாதத்தால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது.
சோமாலியா 1960-ல் சுதந்திரம் பெற்றது. சோமாலியா இன்னும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 1 கோடியே 26 லட்சம் ஆகும்.
![உலகின் மிக ஏழ்மையான நாடுகள் Very Poor Countries in the World 1 Very Poor Countries சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/02/Untitled-design-2024-02-08T182636.677.jpg)
காங்கோ: காங்கோ உலகின் ஐந்தாவது ஏழை நாடு. சர்வாதிகாரம், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் வன்முறை ஆகியவை காங்கோவில் நிலைமையை மோசமாக்கியுள்ளன. காங்கோ மக்களில் முக்கால்வாசி மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு டாலர்கள் (166 இந்திய ரூபாய்) கூட செலவழிக்க முடியாத நிலை உள்ளது.
Kidhours – Very Poor Countries
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.