US Inflation சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவில் கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தொழிலாளர் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 8.2% உயர்ந்துள்ளதோடு,
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவிக்கம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து 8 சதவீதத்திற்கும் மேல் நீடித்து வருவதாகவும்,
ஓகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் நுகர்வோர் விலைக் குறியீடு செப்டம்பர் மாதத்தில் 0.4% உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணவீக்கத்தால் அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,
வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Kidhours – US Inflation
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.