US Helps to Gaza சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தினால் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடியை குறைப்பதற்காக காசாவிற்கு சிறிதளவு மனிதாபிமான உதவியை அனுப்புவது தொடர்பில் அமெரிக்காவும் எகிப்தும் இணக்கம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பும்வேளை அமெரிக்க அதிபர், எகிப்திய அதிபர் அப்துல் பட்டா சிசியுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளார்.
இந்நிலையில், காசாவிற்குள் 20 லொறிகளில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக ரபா எல்லையை திறந்துவிடுவதற்கு எகிப்திய அதிபர் இணங்கியுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்.அத்துடன், தொடர்ச்சியான விதத்தில் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து அமெரிக்கா முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும் ரபா எல்லை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பைடன் குறிப்பிடப்படாத நிலையில், வீதிகள் திருத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் நாட்களில் எல்லை திறக்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
Kidhours – US Helps to Gaza
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.