US Drone சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்க மாநிலம் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் 843 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது புகழ் பெற்ற சென்ட்ரல் பார்க் (Central Park). நியூயார்க் நகரின் ஐந்தாவது மிக பெரிய பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள ஏரிக்கு அருகே சனிக்கிழமை இரவு ட்ரிஃப்ட் (DRIFT) எனும் டச்சு ஸ்டூடியோ ஒன்றினால் “பிரான்சைஸ் ஃப்ரீடம்” (Franchise Freedom) எனும் பெயரில் நடத்தப்பட்ட ஒரு கண்கவர் நிகழ்வு உலகமெங்கும் பேசுபொருளாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இரவு வானில் 1000 டிரோன்கள் ஒரே நேரத்தில் பறக்க விடப்பட்டன. அந்த டிரோன்களை இயக்குபவர்களால் வானில் பறந்த அவை பல கலை வடிவங்களை காண்பிக்கும்படி பறக்க விடப்பட்டது.
10 நிமிட இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் பறந்த இவை, இது போல் 3 முறை பல வெவ்வேறு விதமான வடிவங்களை வானில் வெளிப்படுத்தின.
ஒவ்வொரு டிரோனில் இருந்தும் வரும் சிறு ஓளி ஒட்டு மொத்தமாக 1000 டிரோன்களில் இருந்து பெரும் நட்சத்திர கூட்டம் போன்று வானில் தெரிந்தது.
Kidhours – US Drone
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.