Sunday, July 7, 2024
Homeசிறுவர் செய்திகள்படகு கவிழ்ந்து 8 பேர் பலி US Boat Accident

படகு கவிழ்ந்து 8 பேர் பலி US Boat Accident

- Advertisement -

US Boat Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் உள்ள சான்டீகோ கறுப்பு கடற்கரை பகுதிகளில் படகுகளில் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்ற நிலையில் இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

- Advertisement -

இந்நிலையில் 2 கடத்தல் படகுகளில் சுமார் 15 பேர் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தபோது கடும் பனிமூட்டம் இருந்ததால் அந்தப் படகுகள் கடலின் ஆழம் குறைந்த பகுதிக்குச் சென்றுவிட்டன.

- Advertisement -

திடீரென அந்த 2 படகுகளும் கவிழ்ந்ததால் அதில் பயணம் செய்த 15 பேரும் நீரில் மூழ்கினார்கள். இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் சில பெண்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.தகவல் அறிந்து கடலோர மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும் படகு கவிழ்ந்த பகுதியில் கடும்பனி நிலவியதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.

நீண்ட நேரத்துக்குப் பிறகு இறந்த 8 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. அதேசமயம் விபத்துக்குள்ளான பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருந்ததால் அவர்கள் நீந்தி உயிர் தப்பி இருக்கலாம் எனத் தெரிகிறது.

அந்தக் கப்பல்களில் இருந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Kidhours – US Boat Accident

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.